திண்டிவனம் மின்வாரிய செயற்பொறியாளர் தற்கொலை

விழுப்புரம்: தேனி   மாவட்டம், கம்பம் அருகே புதுப்பட்டியை  சேர்ந்தவர்   சதீஷ்குமார் (50). இவர் திண்டிவனத்தில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில்   செயற்பொறியாளராக பணியாற்றி வந்தார். நேற்றுமுன்தினம் இரவு பணி முடிந்து சதீஷ்குமார் வீட்டுக்கு வந்துள்ளார். சிறிது நேரத்தில் அவர் வாந்தி   எடுக்கவே, மனைவி   கேட்டபோது விஷம் குடித்துவிட்டு வந்ததாக கூறினார்.

இதைக்கேட்டு   அதிர்ச்சியடைந்த அவர், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் சதீஷ்குமாரை   விழுப்புரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு முதலுதவி சிகிச்சைக்குப்பின்   மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு   செல்லும்போது வழியிலேயே அவர் உயிரிழந்தார்.  இதுகுறித்து விழுப்புரம் மேற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.

Related Stories: