×

ஹார்லிக்ஸ் டயாபட்டீஸ் பிளஸ், அப்போலோ சுகர் கிளினிக்ஸ் இணைந்து நீரிழிவு நோய் விழிப்புணர்வு

சென்னை: இந்தியாவில் நீரிழிவு நோய் தொடந்து அதிகரிக்கும் ஒரு சவாலாக இருந்து வருகிறது. கிட்டத்தட்ட 50%   நீரிழிவு பாதிப்புகள் கண்டுபிடிக்கப்படாமலே இருக்கின்றன. 90% முன் நீரிழிவு நோயாளிகளுக்கு அந்த பாதிப்பு இருப்பதே தெரியாது. இந்த இடைவெளியை கண்டறிந்து, ஹார்லிக்ஸ் டயாபட்டீஸ் பிளஸ் மற்றும் அப்போலோ சுகர் கிளினிக்ஸ் இணைந்து இந்தியா முழுவதும் 50,000 பேருக்கு பரிசோதனை செய்து நீரிழிவு மற்றும் முன் நீரிழிவு நோயின் நிலை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த உள்ளன.

ஒரு மாதம் நடக்கவுள்ள இந்த நிகழ்வில், ஹார்லிக்ஸ் டயாபட்டீஸ் பிளஸ் மற்றும் அப்பல்லோ சுகர் கிளினிக்ஸ் இலவச பரிசோதனையை வழங்கும். ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக உள்ளவர்களுக்கு நீரிழிவு நோயை கையாளுவது குறித்து நிபுணரின் இலவச ஆலோசனை மற்றும் வழிகாட்டல் வழங்கப்படும். இதுகுறித்து இந்துஸ்தான் யூனிலிவர் லிமிடெட் நிறுவன நியூட்ரிஷன் பிரிவு துணை தலைவர் கிருஷ்ணன் சுந்தரம் பேசுகையில், “இங்கு சர்க்கரை நோய் குறித்த விழிப்புணர்வு மிகவும் குறைவாக உள்ளது. ஆரம்பகட்டத்தில் நோயைக் கண்டறிவது மற்றும் சிகிச்சை பெறுவதன் மூலமாக நோயோடு தொடர்புடைய சாத்தியமான சிக்கல்களைத் தவிர்க்கலாம்” என்றார்.

அப்போலோ ஹெல்த் மற்றும் லைப்ஸ்டைல் லிமிடெட்டின் தலைமை நிர்வாக அதிகாரி சந்திர சேகர் பேசுகையில்,:
“அதிக இனிப்புகள் சாப்பிடுவது மட்டுமே இதற்கு அடிப்படைக் காரணமில்லை. மனஅழுத்தம், போதிய உடற்பயிற்சி இல்லாதது, முறையற்ற உணவு மற்றும் தூக்கம் போன்ற வாழ்க்கைமுறை காரணிகளும், இயற்கையான மரபுவழி பிரச்னைகளும் இதில் பெறும் பங்காற்றுகின்றன” என்றார்.

Tags : Horlix ,Apolo Sugar Clinics , Horlicks Diabetes Plus, Apollo Sugar Clinics, Diabetes awareness
× RELATED மெத்தாம்பெட்டமின் விற்றவர் சிக்கினார்