×

விம்பிள்டன் டென்னிஸ் 4வது சுற்றில் அனிசிமோவா

லண்டன்: விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 4வது சுற்றில் விளையாட, அமெரிக்க வீராங்கனை அமெண்டா அனிசிமோவா தகுதி பெற்றார். 3வது சுற்றில் சக வீராங்கனை கோகோ காஃப் (18 வயது, 12வது ரேங்க்) உடன் நேற்று மோதிய அனிசிமோவா (20 வயது, 25வது ரேங்க்) 6-7 (4-7) என்ற கணக்கில் முதல் செட்டை இழந்து பின்தங்கினார். பின்னர் சுதாரித்துக் கொண்டு அதிரடியாக விளையாடிய அவர் 6-2, 6-1 என அடுத்த 2 செட்களையும் மிக எளிதாக வென்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். விறுவிறுப்பான இப்போட்டி 2 மணி, 7 நிமிடத்துக்கு நீடித்தது. மற்றொரு 3வது சுற்றில் பிரான்சின் ஹார்மனி டான் (24 வயது, 115வது ரேங்க்) 6-1, 6-1 என்ற நேர் செட்களில் இங்கிலாந்தின் கேத்தி போல்ட்டரை (25 வயது, 118வது ரேங்க்) வீழ்த்தினார். இப்போட்டி 51 நிமிடத்திலேயே முடிவுக்கு வந்தது.

Tags : Anisimova ,Wimbledon , Anisimova in Wimbledon Tennis 4th round
× RELATED விம்பிள்டன் டென்னிஸ் பைனலில் இன்று...