×

ஆந்திர சட்டசபை தேர்தலில் போட்டியா? விஷால் டிவிட்

சென்னை: ஆந்திரா சட்டசபை தேர்தலில் குப்பம் தொகுதியில் சந்திரபாபு நாயுடுவுக்கு எதிராக விஷால் போட்டியிடுவார் என தகவல் பரவியது. இது குறித்து டிவிட்டரில் விஷால் கூறும்போது, ‘குப்பம் தொகுதியில் நான் போட்டியிடுவதாக வந்த தகவலை மறுக்கிறேன். ஆந்திரா அரசியலில் ஈடுபடும் எண்ணம் எனக்கு கிடையாது.

சந்திரபாபு நாயுடுக்கு எதிராக நான் போட்டியிடவில்லை. இதுபோன்ற வதந்திகள் எப்படி பரவுகிறது என்பது தெரியவில்லை. சினிமாவில் மட்டுமே நான் கவனம் செலுத்தி வருகிறேன்’ என்றார்.


Tags : Andhra ,Vishal Dewitt , Andhra assembly election contest? Vishal Dewitt
× RELATED ஆந்திர முதல்வர் மீது கல்வீச்சு: துப்பு கொடுத்தால் சன்மானம்