×

விம்பிள்டன் டென்னிஸ் 3-வது சுற்றில் நடால் ஹாலெப்

லண்டன்: கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 2ம் நிலை வீரரான ஸ்பெயினின் ரபேல் நடால், 6-4, 6-4, 4-6, 6-3 என்ற செட் கணக்கில், லிதுவேனியா ரிகார்தாஸ் பெரான்கிசை வீழ்த்தி 2வது சுற்றுக்குள் நுழைந்தார். மகளிர் ஒற்றையர் 2வது சுற்றில் ருமேனியாவின் சிமோனா ஹாலெப், 7-5, 6-4 என பெல்ஜியத்தின் கிர்ஸ்டன் பிளிப்கென்சை வீழ்த்தினார்.

அமெரிக்காவின் கோகோ காஃப் 6-2, 6-3, என ருமேனியாவின் மிஹேலாவை வென்று 3வது சுற்றுக்குள் நுழைந்தார். நம்பர் ஒன் வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக் 6-4, 4-6, 6-3 என்ற செட் கணக்கில் நெதர்லாந்தின் பட்டினாமா கெர்கோவை வென்றார். சர்வதேச டென்னிசில் அவர் தொடர்ச்சியாக பெற்ற 37வது வெற்றி இதுவாகும்.

Tags : Nadal Halep ,Wimbledon , விம்பிள்டன் டென்னிஸ் 3-வது சுற்றில் நடால் ஹாலெப்
× RELATED விம்பிள்டன் டென்னிஸ் பைனலில் இன்று...