எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கியது பாஜ தான்; நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ பேட்டி

திருச்செந்தூர்: எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கியது பாஜ அரசுதான் என்று திருச்செந்தூரில் தமிழக சட்டமன்ற குழு பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு, தமிழக சட்டமன்ற குழு பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன், நேற்று வந்தார். தரிசனம் செய்த பின்னர் அவர் அளித்த பேட்டி: 2024ல் நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் அதிமுகவுடன் இணைந்துதான் பாஜ போட்டியிடும். அதிமுகவில் ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு ஒற்றை தலைமை போன்ற சிறுசிறு சலசலப்புகள் இருப்பது இயல்பு.

பல்வேறு சூழ்நிலைகளில் நட்புடன் ஆதரவு அளித்தது மட்டுமின்றி எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கியதும் ஒன்றிய பாஜ அரசு தான். சிங்கப்பூர், மலேசியா போன்ற வெளிநாடுகளில் குடும்பத்தில் ஒருவர் ராணுவத்தில் சேர வேண்டும் என்ற கட்டாயம் இருப்பதைப்போல் அல்லாமல், இந்திய நாட்டிற்கு சேவை செய்ய விருப்பமுள்ள இளைஞர்களுக்கு அரசாங்கம் ஒரு வாய்ப்பினை அக்னிபாதை திட்டத்தின் மூலம் வழங்கி இருக்கிறது. அக்னி பாதை திட்டம் மிகவும் சிறப்பான திட்டமாகும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: