மராட்டிய முதலமைச்சராக இன்றே பதவியேற்கிறார் தேவேந்திர பட்னாவிஸ்?

மும்பை: இன்று மாலை 7 மணிக்கு மகாராஷ்டிர முதலமைச்சராக பாஜகவை சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ் பதவியேற்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே மராட்டிய முதலமைச்சராக பதவி வகித்த பட்னாவிஸ் 3வது முறையாக பதவியேற்க உள்ளார். சிவசேனா அதிருப்தி அணியின் தலைவர் ஏக்நாத் ஷிண்டே துணை முதலமைச்சராவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இன்று மாலை 4.30 மணிக்கு ஆளுநரை சந்தித்து தேவேந்திர பட்னாவிஸ் ஆட்சியமைக்க உரிமை கோருகிறார். மராட்டிய முதலமைச்சர் உத்தவ் தாக்கரே ராஜினாமாவை தொடர்ந்து பாஜக ஆட்சி அமைக்கிறது.

Related Stories: