×

நாரவாரிக்குப்பத்தில் தீவிர தூய்மைப் பணிகள் மற்றும் விழிப்புணர்வு முகாம்கள்: பேரூராட்சிகளின் ஆணையர் துவக்கி வைத்தார்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், நாரவாரிக்குப்பம் பேரூராட்சியில் பேரூராட்சிகளின் ஆணையர் இரா.செல்வராஜ் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்க விழிப்புணர்வு நடவடிக்கையாக, பேருந்து நிலையத்தில் தூய்மை உறுதிமொழினை ஏற்றுக் கொண்டார்.
பிறகு சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுப் பொருட்கள் கண்காட்சியினை பொதுமக்கள் பார்வைக்கு துவக்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து வார்டு எண்.14, அண்ணா தெரு, வார்டு எண்.15, மேட்டுத் தெருவில் வீடு, வீடாகச் சென்று குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம்பிரித்து வழங்குதல், குப்பைகளை வெளியே கொட்டுவதை தவிர்த்தல் மற்றும் ஒரு முறை பயன்படுத்தப்படும் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருட்களை தவிர்த்தல் தொடர்பாக பொதுமக்கள் மற்றும் வணிக கடை வியாபாரிகளுக்கு எடுத்துரைத்து விழிப்புணர்வினை ஏற்படுத்தினார்.

மேலும் சிறந்த முறையில் குப்பைகளை தரம் பிரித்து தூய்மை பணியாளர்களிடம் வழங்கும் நபர்களுக்கு பரிசுகள் வழங்கி ஊக்குவித்தார். இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் ச.கண்ணன், பேரூராட்சித் தலைவர் கு.தமிழரசிகுமார், துணைத்தலைவர் ஆர்.இ.ஆர்.விப்ரநாராயணன், செயல் அலுவலர் ம.பாஸ்கரன், சுகாதார ஆய்வாளர் மதியழகன், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள்,  வியாபாரிகள் நலச்சங்க தலைவர்,  மகளிர் சுயஉதவி குழு உறுப்பினர்கள், கல்லூரி மாணவ, மாணவியர்கள், பொதுமக்கள் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Narawarikuppam ,Commissioner of Municipalities , Intensive clean-up operations and awareness camps in Narawarikuppam: Inaugurated by the Commissioner of Municipalities
× RELATED செம்பரம்பாக்கம், புழல் ஏரியில்...