×

டிடிகே பிரெஸ்டீஜ் நிறுவனத்தின் ஆல் இன் ஒன் கிச்சன்: பிரெஸ்டீஜ் நிறுவனத்துடன் இணைந்த அல்ட்ராப்ரெஷ்

சென்னை: இந்தியாவின் முன்னணி சமையலறை உபகரணங்கள் தயாரித்து வழங்கும் நிறுவனங்களில் டிடிகே பிரெஸ்டீஜ் முன்னிலையில் உள்ளது. தனது வர்த்தகத்தை விரிவுப்படுத்தும் வகையில் அல்ட்ராப் ரெஷ் (Ultrafresh) நிறுவனத்துடன் முதலீடு மற்றும் வணிக ஒத்துழைப்பு மேற்கொள்வது ெதாடர்பாக ஒப்பந்தம் செய்துள்ளதன் மூலம் புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தி உள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு பெங்களூருவில் நேற்று வெளியிடப்பட்டது.

இது குறித்து டிடிகே பிரெஸ்டீஜ் நிறுவன தலைவர் ஜெகநாதன் கூறுகையில், ‘குக்கர், சமையல் பாத்திரங்கள், எரிவாயு அடுப்புகள் மற்றும் உபகரணங்கள் போன்ற பிரிவுகள் தயாரித்து மக்களிடம் விற்பனை செய்ததின் மூலம் கொரோனா காலத்திலும் தனது வர்த்தகத்தை இழக்காமல் வாடிக்கையாளர்களின் நன்மதிப்புடன் நல்ல நிலையில் உள்ளோம். வாடிக்கையாளர்களின் தேவையை உணர்ந்து, மக்கள் பயன்படுத்தும் எங்களது அதீத சமையல் அறை பொருட்கள், மிகுந்த கவனத்துடன் அறிவியல் ரீதியாகவும் பாதுகாப்பு தரமாகவும் தயாரிக்கப்பட்டது என்பது குறிப்பிடதக்கது.

அதேபோல், சமையல் அறை வடிவமைப்பும் இந்தியா நாட்டின் மக்களின் பயன்பாட்டிற்கும் பயன்படுத்துவோரின் தேவைக்கு ஏற்பவும் வடிவமைத்து கொடுக்க சந்தையில் 5 ஆண்டுகள் அனுபவமுள்ள அல்ட்ராப்ரெஷ் நிறுவனத்துடன் இணைந்து சேவை வழங்க முடிவு செய்துள்ளோம்.

ஒரே நிறுவனம் என்ற நிலையை மாற்றி இரு நிறுவனங்களாக இணைந்து செயல்படுவதன் மூலம் இரட்டை இலக்கை எட்டும் முயற்சி ெதாடங்கப்பட்டது. அதற்காக அல்ட்ராப்ரெஷ் மாடுலர் சொலுயூஷன் நிறுவனத்துடன் இணைந்து வர்த்தகம் செய்ய முடிவு செய்து, இரு நிறுவனங்கள் இணைந்து ஒப்பந்தம் செய்துள்ளோம்’ என்றார்.

நிர்வாக இயக்குனர் சந்துரு கல்ரோ கூறும்போது, ‘இது இரண்டு சக்திவாய்ந்த பிராண்டுகள் ஒன்றிணைந்தது, அவை வலிமைமிக்க சக்தியை உருவாக்குகின்றன. அதைத்தான் நாங்கள் சரியாகச் செய்துள்ளோம். இந்த கூட்டாண்மையுடன். இந்த முன்முயற்சி முழு சமையலறையையும் சொந்தமாக்க வேண்டும் என்ற எங்கள் நீண்ட கால நோக்கத்தை பிரதிபலிக்கிறது. கடந்த 60 ஆண்டுக்கும் மேலாக எங்கள் மதிப்புமிக்க வாடிக்கையாளர்கள் தங்கள் சமையலறையை மாற்றியமைக்க எங்களை நம்பியிருக்கிறார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட உபகரணங்கள் பிராண்ட். ஒரே இடத்தில் இருந்து கொடுப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்’ என்றார்.

அல்ட்ராப்ரெஷ் மாடுலர் சொல்யூஷன்ஸ் லிமிடெட் தலைமை நிர்வாக அதிகாரி துருவ் திரிகுனாயத் கூறும்போது, ‘நாங்கள் டிடிகே பிரெஸ்டீஜ் போன்ற மதிப்பிற்குரிய நிறுவனத்துடன் கைகோர்ப்பது மிகவும் பெருமையாக உள்ளது. அல்ட்ராப்ரெஷ்  தொடக்கத்தில் நம்பர் 1 மாடுலர் ஆக வேண்டும் என்ற லட்சிய பார்வையுடன் சந்தைக்கு வந்துள்ளது. இந்தியாவில் கிச்சன் பிராண்ட், இந்த லட்சியம் டிடிகே பிரெஸ்டீஜை விட சிறந்த கூட்டாளரைக் கண்டுபிடித்திருக்க முடியாது’ என்றார்.

Tags : DDK ,Prestige , DDK Prestige All-in-One Kitchen: UltraFresh in association with Prestige
× RELATED வருமானத்தை குறைத்து கணக்கு...