×

பெரியபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பாழடைந்து கிடக்கும் கட்டிடம்: இடித்து அகற்ற கோரிக்கை

பெரியபாளையம்: பெரியபாளையம் அரசு மேல்நிலைபள்ளியில் உள்ள 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டுள்ள பழைய கட்டிடத்தை இடித்து அகற்றிவிட்டு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். எல்லாபுரம் ஒன்றியம் பெரியபாளையம் அரசு மேல்நிலை பள்ளியில் பெரியபாளையம், வடமதுரை, 82.பனப்பாக்கம், ராள்ளபாடி, தண்டலம், ஏனம்பாக்கம், நெல்வாய், எம்.என்.சத்திரம் வண்ணான்குப்பம், ஆத்துப்பாக்கம், அரியபாக்கம், உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட சுற்றுவட்டார பகுதிகள் உள்ளன. இங்கிருந்து சுமார் 900 மாணவ, மாணவிகள் இந்த பள்ளியில் பயின்று வருகின்றனர்.

இந்த பள்ளியில் 1976ம் ஆண்டு 10 வகுப்பறைகள் கொண்ட சிமென்ட் ஓடு கட்டிடம் கட்டி சுமார் 50 ஆண்டுகள் ஆகிறது. தற்போது இந்த கட்டிடம் பழுதடைந்து அதில் பள்ளியின் பழைய மரத்தால் செய்யப்பட்ட மேஜைகள், ஆசிரியர்கள் அமரும் நாற்காலிகள் மற்றும் பழைய பொருட்களை அந்த கட்டிடங்களில் உள்ளே போடப்பட்டுள்ளது. இதில் சில நேரங்களில் விஷப்பூச்சிகளின் இருப்பிடமாக மாறியுள்ளது. எனவே இந்த பழைய கட்டிடத்தை அகற்றிவிட்டு புதிய கட்டிடங்கள் கட்டித்தர வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 1976 ம் ஆண்டு 10 வகுப்பறைகள் கொண்ட சிமென்ட் ஓடு கட்டிடம் கட்டி சுமார் 50 ஆண்டுகள் ஆகிறது.    

* கட்டிடத்தில் விரிசல்
பொதுமக்கள் கூறுகையில், `இந்த பள்ளி கட்டிட வளாகத்தில் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டுள்ள கட்டிடத்தில் பழைய பொருட்கள் போடப்பட்டுள்ளதால் அடிக்கடி இதில் பாம்பு, தேள் உள்ளிட்ட விஷப்பூச்சிகளின் இருப்பிடமாக மாறியுள்ளது. இதனால் மாணவ, மாணவிகள் அச்சுத்துடன் படித்து வருகின்றனர். மேலும் ஓடு போட்ட கட்டிடம் விரிசல் விட்டு விழும் நிலையில் உள்ளது. எனவே, இந்த கட்டிடத்தை அகற்றி கூடுதல் கட்டிடம் கட்டித்தரவேண்டும்’ என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : Periyapalayam Government High School , Dilapidated building at Periyapalayam Government High School: Demand for demolition
× RELATED பெரியபாளையம் அரசு பள்ளியில்...