32 ஆண்டுகளுக்கு பிறகு முதல் ஹீரோவுடன் நடிக்கும் மீனா

ஐதராபாத்: பல மொழிகளில் அனைத்து முன்னணி ஹீரோக்களுக்கும் ஜோடியாக நூற்றுக்கணக் கான படங்களில் நடித்தவர், மீனா. தற்போது தெலுங்கு சீனியர் நடிகர் ராஜேந்திர பிரசாத்துடன் நடிக்கும் மீனா, அவருடன் எடுத்துக்கொண்ட போட்டோவை வெளியிட்டு, ‘32 ஆண்டுகள் கழித்து என் முதல் ஹீரோவுடன் மீண்டும் இணைந்து நடிக்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார். கடந்த 1990ல் தெலுங்கில் வெளியான ‘நவயுகம்’ என்ற படத்தில் மீனா ஹீரோயினாக அறிமுகமானார். இதில் ராஜேந்திர பிரசாத் ஜோடியாக நடித்திருந்த அவர், 32 ஆண்டுகள் கழித்து மீண்டும் அவருடன் ஜோடி சேர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: