×

ஒற்றைத் தலைமை விவகாரத்தில் பாஜக தலையீடு இல்லை: அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

சென்னை: ஒற்றைத் தலைமை விவகாரத்தில் பாஜக தலையீடு இல்லை என ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அதிமுகவில் தற்போதுள்ள இரட்டை தலைமைக்கு (ஓபிஎஸ் - இபிஎஸ்) பதில், ஒற்றைத் தலைமையை கொண்டு வர வேண்டும் என்ற முனைப்பில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்; ஓபிஎஸ் செயல்பாடுகள் குறித்து தொண்டர்கள் மத்தியில் ஆதங்கம் நிலவி வருகிறது. தூங்குபவரை எழுப்பலாம், ஆனால் தூங்குவது போல நடிப்பவரை எழுப்ப முடியாது.

அதிமுகவில் ஒற்றைத் தலைமை அவசியம். ஒற்றைத் தலைமை விவகாரத்தில் பாஜக தலையீடு இல்லை. அதிமுகவில் அடிமட்ட தொண்டனும் உயர் பதவிக்கு வரலாம் என்பதற்கு அவைத்தைவர் தமிழ்மகன் உசேன் சான்று. ஜூலை 11ம் தேதி நடைபெறும் பொதுக்குழுவில் ஒற்றை தலைமை செயல்வடிவம் பெறும். அதிமுகவின் சட்ட விதிகள் குறித்து வைத்திலிங்கம் தெளிவு பெறுவது நல்லது. 1,000 ஆண்டுகள் ஆனாலும் கட்சி நிலைத்து நிற்கும் வகையில் புரட்சித் தலைவர், புரட்சித் தலைவி ஆகியோர் சட்ட விதிகளை வகுத்துள்ளனர். அனைவரும் ஒற்றை தலைமையை விரும்பும் நிலையில் அதற்கு ஆதரவு தராமல் நீதிமன்றத்திற்கு செல்வதால் தொண்டர்களுக்கு தான் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது.

தொண்டர்களுக்குத் தான் மனஉளைச்சலே தவிர கட்சியின் முடிவை எதிர்த்து நீதிமன்றத்திற்கு செல்பவர்களுக்கு அல்ல. ஒற்றைத் தலைமைக்கு எதிரான ஓ.பன்னீர்செல்வத்தின் செயல்பாட்டால் தொண்டர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். ஒற்றைத் தலைமைக்கு எடப்பாடி பழனிசாமி தான் பொறுப்பேற்க வேண்டும் என தொண்டர்கள் விரும்புகிறார்கள். தமிழ்நாட்டில் மீண்டும் எடப்பாடி பழனிசாமி தலைமையில், ஜெயலலிதா ஆட்சி அமைப்போம் எனவும் கூறினார்.


Tags : jayakumar ,minister , No BJP involvement in single leadership issue: AIADMK ex-minister Jayakumar interview
× RELATED மது ஒழிப்பு மாநாட்டில் அதிமுக...