கரூருக்கு 2ம் தேதி முதல்வர் வருகை: அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டி

கரூர்: கரூரில் அமைச்சர் செந்தில்பாலாஜி நேற்று அளித்த பேட்டி: தமிழகத்திலேயே முதன் முறையாக ஒரே நிகழ்ச்சியில் 76,486 பயனாளிகளுக்கு நலத்திட்டங்கள் வழங்கும் வரலாற்று நிகழ்வு கரூரில் நடைபெற உள்ளது. இதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் 2ம் தேதி கரூர் வருகிறார். அப்போது  நலத்திட்ட உதவிகளை் வழங்க உள்ளார். ரே ஆண்டில் ஒரு மாவட்டத்தில் இந்த அளவிற்கு அதிகப்படியான பயனாளிகளுக்கு நலத்திட்டங்கள் வழங்குவது இதுவே முதல் நிகழ்வாகும். ஒரே ஆண்டில் கரூர் மாவட்டத்திற்கு பல திட்டங்களை தந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கரூர் மாவட்ட மக்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: