×

வல்லூர் அனல் மின்நிலையத்தில் மின் உற்பத்தி பாதிப்பு

சென்னை: திருவள்ளூர் மாவட்டத்தில் தேசிய அனல் மின்கழகம், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் இணைந்து கூட்டு நடவடிக்கையாக, வல்லூர் அனல் மின்நிலையம் நிறுவப்பட்டு, 3 அலகுகளில் தலா 500 மெகாவாட் என மொத்தம் 1500 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன் 3வது அலகின் கொதிகலனில் ஏற்பட்ட பழுது சரிசெய்யப்பட்டு, நேற்று முன்தினம் முதல் 500 மெகாவாட் மின் உற்பத்தி துவங்கியது. இந்நிலையில், நேற்று காலை மீண்டும் 2வது அலகில் உள்ள கொதிகலனில் கசிவு ஏற்பட்டது. இதனால் அந்த அலகில் 500 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. கொதிகலன் பழுதை நீக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags : Vallur Thermal Power Station , Impact of power generation at Vallur Thermal Power Station
× RELATED வல்லூர் அனல் மின்நிலைய தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்