புதுச்சேரி - காங்கேசன்துறை இடையே சரக்கு படகு போக்குவரத்து: இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தகவல்

ராமேஸ்வரம்: புதுச்சேரி, காரைக்கால் - இலங்கை காங்கேசன்துறை துறைமுகங்களுக்கு இடையே சரக்கு படகு போக்குவரத்து துவங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். இலங்கை மீன்பிடித்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இலங்கையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘‘‘தமிழகத்தின் காரைக்கால், புதுச்சேரி துறைமுகங்களில் இருந்து இலங்கையின் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு சரக்கு படகு போக்குவரத்து துவங்கப்பட உள்ளது. இதன் மூலம் அத்தியாவசிய பொருட்கள் நியாயமான விலையில் தேவையான அளவிற்கு கொண்டுவர முடியும்.

சரக்கு படகு போக்குவரத்திற்காக இலங்கை பாதுகாப்பு அமைச்சகத்தின் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கூடிய விரைவில் சரக்கு படகு சேவை ஆரம்பிக்கப்படும். இதற்கான முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறேன். அதேபோல் திருச்சி, சென்னையில் இருந்து இலங்கை பலாலி நகருக்கு விமான போக்குவரத்து சேவையையும் திட்டமிட்டபடி ஜூலை 1ம் தேதியில் இருந்து துவங்குவதற்கான நடவடிக்கைகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது’’ என்றார்.

Related Stories: