சமயநல்லூர்- விருதுநகர் நான்கு வழிச்சாலையில் வேகத்தை கணிக்கும் கேமிராக்கள் அமைப்பு

திருமங்கலம்:பெங்களூரிலிருந்து மதுரை வழியாக கன்னியாகுமரி  வரையில் நான்கு வழிச்சாலை செல்கிறது. இந்த சாலையில் மதுரை மாவட்டம்  சமயநல்லூரிலிருந்து விருதுநகர் வரையில் தற்போது வாகனங்களின் வேகங்களை  கண்காணிக்கும் கேமிராக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. கடந்த 2 தினங்களாக  திருமங்கலம், கப்பலூர் உள்ளிட்ட பகுதிகளில் சாலையின் நடுவே அமைக்கப்பட்ட  தூண்களில் இரண்டு வேக கட்டுபாட்டினை காட்டும் கேமிராக்கள்  அமைக்கப்பட்டுள்ளன. நேற்று சோதனை முயற்சியாக கப்பலூர் காலனி பஸ்ஸ்டாப்  அருகே வேக கட்டுப்பாடு கேமிராக்கள் இயக்கப்பட்டன.

 அவற்றில் அந்த வழியில்  வரும் வாகனங்களை 100 மீட்டர் தூரத்திலேயே கேமிராக்கள் ஸ்கேன் செய்து  வாகனத்தின் வேகத்தை அருகேயுள்ள டிஸ்பிளே போர்டில் காண்பிக்கின்றனர். கண்காணிப்பு கேமிராக்களில் வாகனங்கள் அதிவேகத்தில் வந்தால் சிகப்பு  வண்ணத்திலும், மெதுவாக வந்தால் பச்சை வண்ணத்திலும் டிஸ்பிளேயில் எண்ணகள்  தெரியும். சோதனை முயற்சிக்கு பின்பு இந்த வேகத்தை கணிக்கும் கேமிராக்களின்  இயக்கம் விரைவில் துவக்கப்படும் என தெரியவந்துள்ளது.

Related Stories: