×

ஒற்றைத் தலைமை தீர்மானத்திற்கு ஐகோர்ட் தடை... தர்மம் வென்றுள்ளது என அதிமுக தலைவர்கள் கருத்து!!

சென்னை : அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் பொதுக்குழுவை நடத்த தடையில்லை என நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் தலைமையிலான அமர்வு உத்தரவிட்டது. அதே நேரத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம் ஒப்புதல் அளித்த 23 தீர்மானங்களைத் தவிர, ஒற்றைத் தலைமை தொடர்பான தனித் தீர்மானத்தை நிறைவேற்ற நீதிபதிகள் தடை விதித்தனர்.

இந்த தீர்ப்பு குறித்து அதிமுக தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அதிமுக முன்னாள் செய்தி தொடர்பாளர் புகழேந்தி : இனி அதிமுகவில் ஓபிஎஸ்தான் தலைமை; ஒருங்கிணைப்பாளர் அவர்தான்.. காரணமின்றி கட்சியை விட்டு காழ்ப்புணர்ச்சியுடன் ஒருவரை நீக்க நினைத்தவருக்கு விடியும்போது கிடைத்த அடிதான் இந்த தீர்ப்பு

ஓ பன்னீர் செல்வம் மகன் ஓ.பி. ரவீந்திரநாத் எம்.பி. : அதிமுக தொண்டர்களின் எண்ணங்கள் தான் இந்த தீர்ப்பு. இன்று நடைபெறும் அதிமுக பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் பங்கேற்பார். மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு அதிமுகவின் ஒன்றரை கோடி தொண்டர்களுக்கும் கிடைத்த வெற்றி.

மாஜி அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் : நீதிமன்றம் வழங்கிய அறிவுறுத்தல் 100% கடைபிடிக்கப்படும். நீதிமன்ற தீர்ப்பினால் எந்தவித பின்னடைவும் இல்லை.

மாஜி அமைச்சர் செல்லூர் ராஜு: ஒற்றைத் தலைமை குறித்து பொதுக்குழுவில் முடிவு செய்யப்படும்.

ஓபிஎஸ் ஆதரவாளர் மனோஜ் பாண்டியன்  : ஒற்றைத் தலைமை தீர்மான விவகாரத்தில் தர்மம் வென்றுள்ளது.

ஈபிஎஸ் ஆதரவாளர் பொள்ளாச்சி ஜெயராமன்: எடப்பாடி பழனிசாமி விரைவில் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்படுவார்.

மாஜி அமைச்சர் ஓ.எஸ். மணியன் : ஒற்றைத் தலைமை தேர்வாகிவிட்டது. அது அனைவருக்கும் தெரியும்.



Tags : iCourt ,Darma , Single Leader, General Committee, Minister, Jayakumar
× RELATED கோடைகாலத்தில் விலங்குகளுக்கு நீர்,...