×

திருப்பணிகள் நடத்த ஒப்புதல் அளித்தபின் 208 கோயில்களில் குடமுழுக்கு: அமைச்சர் சேகர்பாபு தகவல்

சென்னை: இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் திருப்பணிகள் நடத்த ஒப்புதல் அளிக்கப்பட்ட பின்னர், 208 கோயில்களில் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது என இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். இதுகுறித்து, இந்து அறநிலையத்துறை வெளியிட்ட அறிக்கை: முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டில் உள்ள புராதனமான மற்றும் தொன்மையான கோயில்களை தொன்மை மாறாமல் புதுப்பித்து திருப்பணிகள் முடித்து குடமுழுக்கு நடத்த அறிவுரை வழங்கியுள்ளார். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆகம விதிப்படி ஒவ்வொரு கோயிலுக்கும் குடமுழுக்கு நடத்தப்பட வேண்டும். இதனடிப்படையில் கோயில்கள் கீழ்க்கண்டவாறு வகை செய்யப்பட்டு திருப்பணிகள் செய்து குடமுழுக்கு நடத்தப்படுகிறது.

கோயில்களில் மற்றும் கட்டிடங்களின் கட்டுமானம், பழுதுபார்த்தல், பாதுகாத்தல், பேணிக்காத்தல், மீட்டெடுத்தல் மற்றும் புதுப்பித்தல் உள்ளிட்ட பணிகள் திருப்பணியில் அடங்குவனவாகும். வரலாற்றுச் சிறப்பும் தொன்மையும் கொண்டு ஆழ்வார்களாலும், நாயன்மார்களாலும் போற்றிப் பாடப்பட்ட கோயில்கள் மற்றும் கிராமப்புறங்களில் அமைந்துள்ள கோயில்களின் திருப்பணிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுகின்றன. இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் திருப்பணிகள் நடத்த ஒப்புதல் அளிக்கப்பட்டு 7.5.2021 முதல் 17.6.2022 வரை 208 கோயில்களில் திருப்பணி நிறைவுற்று குடமுழுக்கு விழாக்கள் நடத்தப்பட்டுள்ளன. மேலும் 23.6.2022 முதல் 31.7.2022 வரை 30 கோயில்களுக்கு திருக்குடமுழுக்கு நடத்தப்பட உள்ளது என்று இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Minister ,Sekarbabu , 208 temples to be demolished after approval to renovate: Minister Sekarbabu
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...