×

செஸ் ஒலிம்பியாட் போட்டி எதிரொலியாக சோழி பொய்கை குளத்தை சீரமைக்கும் பணி தீவிரம்: விரைந்து முடிக்க கோரிக்கை

மாமல்லபுரம்: செஸ் ஒலிம்பியாட் போட்டி எதிரொலியாக மாமல்லபுரம் பேரூராட்சியில் சோழி பொய்கை குளத்தை சீரமைக்க பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலை நுழைவு வாயில் அருகே 11.48 ஏக்கர் பரப்பளவு கொண்ட சோழி பொய்கை குளம் உள்ளது. இந்த குளம் ஆழ்வார்கள் காலத்தில், நீர் ஆதாரமாகவும், குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு பயனுள்ளதாக விளங்கியது. மேலும், மாமல்லபுரத்தில் கிழக்கில் கடலும், மேற்கில் பக்கிங்ஹாம் கால்வாயும் அமைந்துள்ளது. இதனால், அங்கு ஆழ்துளை கிணறு அமைத்தால் ஒரு சில இடங்களில் உப்பு நீர்தான் வருகிறது. மேலும், இந்த குளத்தில் உள்ள ஊற்றால் மாமல்லபுரம் நகரில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து, தற்போது சுகாதாரமான குடிநீர் கிடைக்கிறது. இந்நிலையில், இந்த, குளத்தை பல ஆண்டுகளாக  மாமல்லபுரம் பேருராட்சி நிர்வாகம் பராமரிக்காமல் விட்டதால் பாழடைந்து தூர்ந்து போய் காணப்பட்டது.

இந்நிலையில், மாமல்லபுரத்தில் நடக்கும் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக, மாமல்லபுரத்தை வெளிநாடுகளில் உள்ளது போல் நவீன முறையில் அழகுபடுத்தவும், பல்வேறு பணிகளை மேம்படுத்தவும் தமிழக அரசு ₹8 கோடி ஒதுக்கியது. இதில், சோழி பொய்கை குளத்தை தூர்வாரி சீரமைக்க ₹95 லட்சம் மதிப்பில் டெண்டர் விடப்பட்டு கடந்த 3 நாட்களுக்கு முன்பு பேரூராட்சி அதிகாரிகள் முன்னிலையில் பணிகள் தொடங்கியது. இந்நிலையில் மேற்கண்ட பணிக்காக நேற்று காலை பேரூராட்சி அதிகாரிகள், பேரூராட்சி தலைவர் முன்னிலையில் திடீரென பூமி பூஜை போடப்பட்டது. இதையறிந்த, பொதுமக்கள் மற்றும் சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகையில், சோழி பொய்கை குளம் 11.48 ஏக்கர் பரப்பளவும், 1.50 கி.மீ தூரமும் கொண்டதாகும். பல, ஆண்டுகளுக்கு முன்பு இந்த குளத்தில் இருக்கும் தண்ணீரை விவசாயம் செய்யப்பட்டது. மாமல்லபுரம், நகருக்கே நீர் ஆதாரமாக விளங்கியது. இங்கு, 44வது சர்வதேச ஒலிம்பியாட் போட்டி நடைபெறுவதால் சோழி பொய்கை குளத்தை தூர் வாரி சீரமைத்து சீரமைப்பதற்காக ₹95 லட்சத்தில் டெண்டர் விடப்பட்டது. கடந்த, 3 நாட்களுக்கு முன்பு குளத்தை சீரமைக்கும் பணி துவங்கி நடந்து வருகிறது. இந்நிலையில், பணி துவங்கி 3 நாட்களுக்கு பிறகு பேரூராட்சி நிர்வாக அதிகாரிகளும், பேரூராட்சி தலைவரும் பூமி பூஜை போட்டது வேடிக்கையாக  உள்ளது என்றனர்

படகு சவாரி ஏற்படுத்தப்படுமா?
சோழி பொய்கை குளத்தை சீரமைக்க ₹95 லட்சத்தை மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகம் ஒதுக்கி உள்ளது. குளத்தை ஆழப்படுத்துதல், 2 மதகுகள் கட்டுதல், கரைகளை பலப்படுத்தி நடைபாதை அமைக்கும் பணி மேற்கொள்ளப்படுகிறது. சர்வதேச, ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்க வரும் வீரர்களை கவரும் விதமாக இருக்க வேண்டும். குளத்தின், ஒரு பகுதியில் ஊற்று உள்ளது. இந்த ஊற்றை தூர்காமல் பணிகள் மேற்கொள்ள வேண்டும். வரும், காலங்களில் சுற்றுலாப் பயணிகளை உற்சாகப்படுத்த படகு சவாரி ஏற்படுத்த வேண்டும். மாமல்லபுரம், பேரூராட்சியில் நடக்கும் அனைத்து பணிகளும் முதல்வரின் நேரடி பார்வைக்கு கொண்டு செல்ல வேண்டுமென விசிக கோரிக்கை வைத்துள்ளனர்.


Tags : Choli False Pool , Echoing the Chess Olympiad competition Intensity of work to rehabilitate Choli False Pond: Demand for speedy completion
× RELATED கருவின் பாலினத்தை அறிவித்தால் கடும்...