சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஹவாலா பணம் ரூ.78 லட்சம் பறிமுதல்

சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கணக்கில் காட்டாத ஹவாலா பணம் ரூ.78,44,000 பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில், ரயில்களில் சட்டவிரோதமாக பொருட்கள் கடத்தி வரப்படுகிறதா என ரயில்வே போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 4வது பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸில் சந்தேகப்படும்படியாக நீல நிற லக்கேஜ் டிராலி பையுடன் இருந்த ஆண் ஒருவரிடம் போலீசார் விசாரித்தபோது அவர் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்தது தெரியவந்தது.

பையை திறக்க சொன்னபோது தயங்கியபடியே இருந்ததால் சந்தேகமடைந்த அதிகாரிகள் அப்பையை சோதனையிட்டனர். அதில் ரூ.78 லட்சத்து 44 ஆயிரம் ரொக்கம் இருந்தது. மேலும் விசாரணையில், அவர் காஞ்சிபுரத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் (45) என்பதும் பணத்தை கொண்டு செல்வதற்கான சட்டபூர்வமான அதிகாரம் அல்லது சரியான ஆவணங்களை அவர் சமர்பிக்கவில்லை. இதனையடுத்து அவரிடம் இருந்த பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் இது குறித்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: