×

திருமுல்லைவாயலில் அடகு கடையில் நகை திருடியவர் கைது

ஆவடி: திருமுல்லைவாயலில் ஒரு அடகு கடையின் பூட்டை உடைத்து நகை திருடிய வாலிபரை நேற்று போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து நகை, வெள்ளி மற்றும் வீடியோ காமிரா பறிமுதல் செய்யப்பட்டது. ஆவடி அருகே திருமுல்லைவாயல் பகுதியில் அடகு கடை நடத்தி வருபவர் கான்ஷாம் (28). இவரது கடையை கடந்த 2 நாட்களுக்கு முன் ஒரு மர்ம நபர் உடைத்து, அங்கிருந்து நகைகள், வெள்ளி பொருட்கள் மற்றும் பணத்தை திருடி சென்றுவிட்டார்.

3 சவரன் செயின், அரை சவரன் கம்மல் மற்றும் ஒன்றரை கிலோ வெள்ளி பொருட்கள் திருடுபோயிருப்பது தெரியவந்தது. இப்புகாரின்பேரில் திருமுல்லைவாயல் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். மேலும், அப்பகுதி சிசிடிவி காமிரா பதிவுகளையும் ஆய்வு செய்தனர். இதில் திருமுல்லைவாயல், தென்றல் நகரை சேர்ந்த மன்மதன் (25) என்ற பழைய குற்றவாளி திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. நேற்று மன்மதனை போலீசார் கைது செய்து விசாரித்தனர்.

விசாரணையில், அவர்மீது ஆவடி உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் வழிப்பறி, செயின் பறிப்பு, வீடு மற்றும் கடைகள் உடைத்து கொள்ளை உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதும், அதே பகுதியில் கடந்த 18ம் தேதி ஒரு வீடியோ கடையை திருடியதும் தெரியவந்தது. அவரிடம் இருந்து மூன்றரை சவரன் நகை, வெள்ளி பொருள் மற்றும் வீடியோ காமிரா பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags : Thirumullaivayal , Thirumullaivayal, pawn shop, jewelery thief arrested
× RELATED பேசுவதற்கு செல்போன் கேட்டு தர மறுத்த...