×

பிளஸ்2, 10ம் வகுப்பு தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று கள்ளக்குறிச்சி பாரதி பள்ளி மாணவர்கள் அபார சாதனை

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி பாரதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தலைமையின் கீழ்  கள்ளக்குறிச்சி, சின்னசேலம், தச்சூர், வடக்கநந்தல், பங்காரம் ஆகிய பகுதிகளில்  பாரதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகள் செயல்படுகின்றன. இந்த பள்ளி மாணவர்கள்  நேற்று முன்தினம் வெளியாகிய பிளஸ்2 மற்றும் 10ம் வகுப்பு அரசு  பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று அபார சாதனைப்படைத்தனர். மேலும்  10ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்கள் பிடித்த மாணவர்கள்  விபரம்: பள்ளியளவில் முதலிடம் மாணவி ரபிப்பா 500க்கு 486 மதிப்பெண்களும்,  2வது இடம் பிடித்த மாணவி சுவேதா 481 மதிப்பெண்களும், மூன்றாவது இடம் மாணவி  வர்னிக்கா 477 மதிப்பெண்களும் பெற்றுள்ளார்.

மேலும் பிளஸ்2 தேர்வில்  பள்ளியளவில் முதல் இடம்பிடித்த மாணவி சிவாணி 600க்கு 586 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இரண்டாவது இடத்தை 2 பேர் பிடித்துள்ளனர். மாணவி அபர்னா, மாணவர்  கிஷோர்ராஜ் ஆகியோர் 578 மதிப்பெண்களும், மூன்றாவது இடம் மாணவி மோனிக் 577 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர்.

பள்ளியளவில் முதல் மூன்று இடங்கள்  பிடித்த மாணவர்களை பாரதி பள்ளி குழுமங்களின் தாளாளர் லட்சுமிகந்தசாமி  பாராட்டி பரிசு வழங்கினார். பள்ளி முதல்வர்  ராமசாமி மற்றும் ஆசிரியர்கள் மாணவர்களை பாராட்டி வாழ்த்தினர். பின்னர்  தாளாளர் லட்சுமிகந்தசாமி கூறுகையில், அதிகமதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு  பள்ளி சேர்க்கை கட்டண சலுகை வழங்கப்படும். அதாவது 10 ம்வகுப்பில் 481 முதல்  490 மதிப்பெண்கள் வரை 100 சதவீதம் சலுகை வழங்கப்படும்.

மேலும் 471 முதல்  480 வரை 70 சதவீதம் கட்டண சலுகையும், 461 முதல் 470 வரை 60 சதவீதமும், 451  முதல் 460 வரை 50 சதவீமும், 426 முதல் 450 வரை 40 சதவீதமும், 401 முதல் 425  வரை 25 சதவீதமும், 375 முதல் 400 வரை 10 சதவீதமும் கட்டண சலுகை  வழங்கப்படும். விடுதி கட்டண சலுகை 490க்கு மேல் 75 சதவீதமும், 481 முதல்  489 வரை 50 சதவீதம் விடுதி கட்டண சலுகை வழங்கப்படும். மேலும் இந்த கட்டண  சலுகையானது வருகிற 27 ம்தேதி வரை மட்டுமே வழங்கப்படும்  என தெரிவிக்கப்பட்டுள்ளது.   


Tags : Kallakurichi Bharathi School , Kallakurichi: Kallakurichi under the leadership of Bharathi Matriculation High School Kallakurichi, Chinnasalem, Thatsur, Vadakkanandal, Bangaram
× RELATED ஆரணி நகரில் கழிவுநீர் கால்வாயில் தவறி விழுந்த காளைமாடு