×

பணி நேரத்தில் பெண் டாக்டர், நர்சுகளுடன் ஒகேனக்கல் சுற்றுலா கவுந்தப்பாடி அரசு தலைமை டாக்டர், பெண் மருத்துவ அலுவலர் சஸ்பெண்ட்

கோபி : பணி ேநரத்தில் பெண் டாக்டர், நர்சுகளுடன் ஒகேனக்கல் சுற்றுலா சென்ற கவுந்தப்பாடி அரசு மருத்துவமனை தலைமை டாக்டர்,  உதவி பெண் மருத்துவ அலுவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.ஈரோடு மாவட்டம் கோபி அருகே கவுந்தப்பாடி அரசு மருத்துவமனை தலைமை டாக்டர் தினகர் (57). மேலும், முதுநிலை டாக்டர்கள் அசோக், வினோத்குமார், சரவணக்குமார், சண்முகவடிவு மற்றும் 6 நர்சுகள் பணியாற்றி  வருகின்றனர். கடந்த 19ம் தேதி தலைமை டாக்டர் தினகர் விடுமுறை எடுக்காமலும், பணிக்கு வராமலும் இருந்தார். இதைத்தொடர்ந்து, விசாரித்தபோது அவர் நர்சு மற்றும் பணியாளர்களுடன் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா சென்றது தெரியவந்தது.

மேலும், தனக்கு பதிலாக மகன் அஸ்வின் (29) என்பவரை சிகிச்சை அளிக்குமாறு அனுப்பி வைத்துள்ளார். இந்த சம்பவம் பற்றி சமூகவலைதளங்களில் வீடியோ வைரலானது. இதையடுத்து,
ஈரோடு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி, ஈரோடு மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குநர் கோமதியை விசாரிக்க உத்தரவிட்டார். அவர் மருத்துவமனைக்கு நேரில் சென்று 4 மணி நேரம் விசாரணை நடத்தினார்.

இந்நிலையில், தலைமை டாக்டர் தினகர் மற்றும் உதவி பெண் மருத்துவ அலுவலர் சண்முகவடிவு ஆகியோரை மாநில மருத்துவ பணிகள் இயக்குநர் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார். அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில் சுற்றுலா சென்றது அவர்களது சொந்த விஷயம், பணி நேரத்தில் இல்லாததுதான் குற்றம். எனவே சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். துறைரீதியாகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Tags : Oyenakkal Tourism Kaunthappadi ,Government ,Chief Physician , Kobe: Female doctor during working hours, Chief Doctor, Assistant Woman at Kaunthappadi Government Hospital who traveled to Okanagan with nurses
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...