காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

திருக்கழுக்குன்றம்: மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ்  செயல்படும் அமலாக்க துறையினர், ராகுல்காந்தி மீது போடப்பட்ட பொய் வழக்கை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டினத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், மாவட்ட தலைவர் சுந்தரமூர்த்தி தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் சி.ஆர்.பெருமாள், நகர தலைவர் நிஜாமுதீன், மாவட்ட பொது செயலாளர் சாகுல் அமீது, மாவட்ட துணை தலைவர் முகமது ரியாஸ், மாவட்ட  செய்தி தொடர்பாளர் கதிர்மோகன் ராஜ், மாவட்ட எஸ்.சி.எஸ்டி தலைவர் ஜீவா முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில், ராகுல்காந்தி மீது போடப்பட்ட பொய் வழக்கை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில், காங்கிரஸ் நிர்வாகிகள் பாண்டியன், சாமி கண்ணன், யாசர், ஏழுமலை, ரஞ்சித், முக்தார், சிங்காரம், தாமோதரன், ரியாஸ் அகமது, ஜான், ஜெய்னூல், கிருஷ்ணா உள்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: