×

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை நீரில் மூழ்கிய சுரங்கப்பாதைகள்: வாகன ஓட்டிகள் அவதி

தாம்பரம்: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், நேற்று முன்தினம் பகல் நேரங்களில் வெயில் சுட்டெரித்தது. பெரும்பாலான இடங்களில் 100 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்தியது. இதன் காரணமாக, வாகன ஓட்டிகள், தள்ளுவண்டி வியாபாரிகள் மிகவும் அவதிக்குள்ளாயினர். இந்நிலையில், மாலை நேரத்தில், கருமேகம் சூழ்ந்து, குளிர்ந்த காற்று வீசியது. இதனையடுத்து, நேற்று முன்தினம் இரவு முதல், விடியவிடிய பலத்த இடி, மின்னலுடன் கனமழை கொட்டித் தீர்த்தது. சுமார் 5 மணி நேரத்துக்கும் மேல் இடைவிடாமல் பெய்த கனமழையால், பெரும்பாலான சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் ஓடியது.

இந்த கனமழை காரணமாக, தாம்பரம் பகுதியில் மேற்கு மற்றும் கிழக்கு பகுதிகளை இணைக்கும் அனைத்து சுரங்கப் பாதைகளிலும், மழைநீர் குளம்போல் தேங்கியது.  இதனால், சுரங்கப்பாதைகளின் வழியே கிழக்கு மற்றும் மேற்கு தாம்பரம் பகுதிகளுக்கு இரு சக்கர வாகனங்கள், ஆட்டோ மற்றும் கார் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் செல்பவர்கள் மிகவும்   அவதிப்பட்டனர். குளம்போல் தேங்கிய நீரில், வாகனங்கள் மெதுவாக சென்றன. இதனால், அங்கு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. எனவே, வாகன ஓட்டிகள் பல கிமீ தூரம் சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டது.தகவலறிந்ததும் தாம்பரம் மாநகராட்சி ஊழியர்கள் விரைந்து வந்து, சுரங்கப்பாதைகளில் தேங்கிய மழைநீரை விரைந்து அகற்றினர்.



Tags : Chennai , Tunnels: Motorists suffer
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...