வேலஞ்சேரி கிராமத்தில் அரசு பள்ளிக்கு புதிய கட்டிடம்: எஸ்.சந்திரன் எம்எல்ஏ திறந்து வைத்தார்

திருத்தணி: வேலஞ்சேரியில் உள்ள அரசு பள்ளிக்கு புதிய கட்டிடத்தை எஸ்.சந்திரன் எம்எல்ஏ திறந்து வைத்தார்.திருத்தணி அடுத்த வேலஞ்சேரியில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கு ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் கீழ் அறிவியல் ஆய்வகம், நூலகம் மற்றும் குடிநீர் வசதி உள்ளிட்டவை கட்டப்பட்டது. இந்நிலையில், இந்த கட்டிடத்தை திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சந்திரன் நேற்று திறந்துவைத்தார்.

இதில் மாவட்ட கல்வி அலுவலர் ஜி.அருள்அரசு தலைமை வகித்தார். முன்னதாக பள்ளியின் தலைமையாசிரியர் பூமிநாதன் வரவேற்றார்.இந்நிகழ்ச்சியில் திருத்தணி ஒன்றிய செயலாளர் ஆர்த்தி ரவி, வேலஞ்சேரி ஊராட்சி மன்ற தலைவர் பார்கவி துக்காராம் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

Related Stories: