×

காஷ்மீரில் 7 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் கடந்த 24 மணி நேரத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 7 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஜம்மு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து அங்கு விரைந்த பாதுகாப்பு படை வீரர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பதுங்கி இருந்த தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய நிலையில் வீரர்கள் பதிலடி கொடுத்தனர். இதில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லபப்பட்டனர். இதேபோல் புல்வாமா மாவட்டத்தில் சாத்போராவில் நடந்த துப்பாக்கி சூட்டில் அடையாளம் தெரியாத தீவிரவாதி சுட்டுக்கொல்லப்பட்டான். முன்னதாக, நேற்று முன்தினம் குல்காம் மற்றும் குப்வாரா மாவட்டத்தில் தலா 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதில் 3 பேர் பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாதிகள், 4 பேர் உள்ளூர் தீவிரவாதிகள் என பாதுகாப்பு படையினர் கூறி உள்ளனர். ஜம்மு காஷ்மீரில் கடந்த 24மணி நேரத்தில் மொத்தம் 7 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags : Kashmir , 7 militants shot dead in Kashmir
× RELATED குங்குமப்பூவின் நன்மைகள்!