கந்துவட்டி கேட்டு மிரட்டிய பெண் மீது வழக்கு

திருமங்கலம்: திருமங்கலம் கொடிமரத்தெருவை சேர்ந்தவர் மூர்த்தி. இவரது மனைவி கவிதா(45). இவர் திருமங்கலம் ராமச்சந்திர தடாக தெருவை சேர்ந்த கலாவள்ளி(50) என்பவரிடம் கடந்த 2018ல் ரூ.5 லட்சம் கடன் வாங்கியுள்ளார். மூன்று ஆண்டுகளாக வட்டியும் கட்டியுள்ளார். இருப்பினும் தற்போது மேலும் ரூ.15 லட்சம் தரவேண்டும் என கவிதவை கலாவள்ளி மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தென்மண்டல ஐஐி அஸ்ராகார்கிடம் கவிதா புகார் தெரிவித்தார். அவரது உத்தரவின்படி, திருமங்கலம் டவுன் போலீசார் கலாவள்ளி மீது கந்துவட்டி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: