நரிக்குடி அருகே கண்மாயில் மீன்பிடி திருவிழா

காரியாபட்டி: நரிக்குடி அருகே குருவியேந்தல் கிராமத்தில் உள்ள கண்மாயில் நேற்று மீன்பிடி திருவிழா நடைபெற்றது. சுமார் 50 ஏக்கர் பரப்பளவு கொண்ட  குருவியேந்தல் கண்மாயில் நடைபெற்ற இந்த மீன்பிடி திருவிழாவில் சுமார் 250க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு போட்டி போட்டு மீன்களை பிடித்தனர். மேலும் இந்த மீன்பிடி திருவிழாவில் கலந்துகொண்ட ஒவ்வொருவரும் 3 முதல் 5 கிலோ வரையிலான கெண்டை, கெழுத்தி, அயிரை, குறவை உட்பட பல்வேறு வகையான மீன்களை  பிடித்து சென்றனர்.

Related Stories: