விக்கிரவாண்டி அருகே திருகுணம் பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றம்

விக்கிரவாண்டி :விக்கிரவாண்டி  காணை அடுத்துள்ள திருகுணம் பகுதியை சேர்ந்தவர் ஜெயராமன் விவசாயி. இவர்  கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருக்குணம் அருகே ஆக்கிரமிப்பு செய்த நிலத்தை  மீட்டு தரக்கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார் இதை தொடர்ந்து  நீதிமன்ற உத்தரவின்படி ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி டி.எஸ்.பி உமாபதி  தலைமையில் நேற்று நடந்தது. போலீசார் பொக்லைன் இயந்திரங்கள் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றினர். ஆக்கிரமிப்பில் இருந்த சுமார் 3 ஏக்கர் நிலங்களை போலீசார் மீட்டனர். அப்போது காணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இளவரசன்,  நரசிம்மன், கஞ்சனூர் காவல் ஆய்வாளர் எழிலரசி, அதிகாரிகள் உடனிருந்தனர்.

Related Stories: