கோடியக்கரை சேர்வராயன் கோயிலில் மீன்வளம் வேண்டி 53 கிடாய் வெட்டி மீனவர்கள் பூஜை

வேதாரண்யம் : வேதாரண்யம் தாலுகா கோடியக்கரை வனவிலங்கு சரணாலயத்தில் சேர்வராயன் கோவிலுக்கு மீன்வளம் வேண்டி 53 கிடாய் வெட்டி மீனவர்கள் சிறப்பு பூஜை நடத்தினர்.

வேதாரண்யம் அடுத்த ஆறுகாட்டுத்துறையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த மீனவ கிராமத்தில் 65 விசைபடகுகளும் 400க்கும் மேற்பட்ட பைபர் படகுகளும் உள்ளன.

மீனவர்கள் நாள்தோறும் காலை மற்றும் மாலை வேளைகளில் வங்களா விரிகுடா மற்றும் பாக் ஜலசந்தியில் மீன்பிடிக்க சென்று வருகின்றனர் வங்களா விரிகுடாவும் பாக்ஜலசந்தியும் சந்திக்கும் இடமான கோடியக்காடு பகுதியில் சேர்வராயன் கோவில் அமைந்துள்ளது நாள்தோறும் இப்பகுதிக்கு மீன்பிடிக்கச் செல்லும்போது மீனவர்கள் நாள்தோறும் மீன் வளம் வேண்டி சேர்வராயனை வணங்கி செல்வது வழக்கம் மீனவர்கள் தங்களுடைய காவல் தெய்வமாக வழிபாட்டு வரும் சேர்வராயன் இக்கோவிலுக்கு ஆண்டுதோறும் மீன்வளம் வேண்டி கிடா வெட்டி பூஜை போடுவது வழக்கம் கடந்த 2 ஆண்டாக கொரோனா தொற்று காரணமாக பூஜை போடாமல் இருந்தனர் இரண்டு ஆண்டுக்கு பிறகுபிறகு ஊர் மக்கள் ஒன்று கூடி ஆறுகாட்டு துறையில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கோடியகாட்டில் அமைந்துள்ள சேர்வராயன் கோவிலுக்குச் சென்று 53 கிடாய் வெட்டி சேர்வராயன் மற்றும் சப்த கன்னிகள் அபிஷேக ஆராதனைகள் செய்து சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர் பின்பு சேர்வராயனுக்கு கறிசமைத்து படையல் வைத்து வழிபட்டனர் பின்புஅனைவருக்கும் கறிவிருந்து அளிக்கப்பட்டது.

Related Stories: