×

திண்டிவனம் அருகே மான்கறி விற்ற இளைஞர் கைது-₹25 ஆயிரம் அபராதம் விதிப்பு

திண்டிவனம் : வானூர் அருகே மான்கறி விற்பனை செய்த இளைஞரை திண்டிவனம் வனத்துறையினர் கைது செய்து அபராதம் விதித்தனர்.வானூர் அடுத்த திருச்சிற்றம்பலம் கூட்ரோடு பகுதியில் மான்கறி விற்பனை செய்வதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து வன அலுவலர்கள் திருமலை, பாலசுந்தரம், வனக்காப்பாளர் பிரபு, கஜேந்திரன் உள்ளிட்டோர் திருச்சிற்றம்பலம் கூட்ரோடு பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது பூத்துறை சாலை அருகே மான்கறி மறைத்துவைத்து விற்பனை செய்த இளைஞரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் மூர்த்தி நகர், நரிக்குறவர் பகுதியை சேர்ந்த அம்மாவாசை மகன் முருகன்(27) என்பதும், இவர் திருவண்ணாமலையில் இருந்து மான்கறி வரவழைத்து அப்பகுதியில் ஒரு கிலோ ரூ.750க்கு விற்பனை செய்வதும் தெரியவந்தது. இதனையடுத்து முருகனை கைது செய்து திண்டிவனம் வனச்சரக அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு வனச்சரக அலுவலர்கள் செல்வி, அஸ்வினி ஆகியோர் விசாரணைக்குப் பிறகு முருகனுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தனர். திண்டிவனம் பகுதிகளில் தொடர்ந்து வனவிலங்குகள் வேட்டையாடி கறி விற்பனை செய்யப்பட்டு வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Tindivanam , Tindivanam: The Tindivanam Forest Department arrested a youth for selling vegetables near Vanur and fined him.
× RELATED திண்டிவனம் நீதிமன்றத்தில் பரபரப்பு...