×

கலைஞர் பிறந்த நாளையொட்டி அன்னதானம், நலத்திட்ட உதவி: ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ வழங்கினார்

திருவள்ளூர்: திருவள்ளூர் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் கலைஞர் பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவி மற்றும் அன்னதானம் ஆகியவற்றை ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ வழங்கினார். திருவள்ளூர் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் கலைஞரின் பிறந்த நாளை முன்னிட்டு பெருமாள்பட்டு ஊராட்சியில் அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.ஜெயசீலன் தலைமை வகித்தார். ஊராட்சி நிர்வாகிகள் எஸ்.பரமேஸ்வரன், ஏ.தினகரன், எம்.சக்திவேல், எஸ்.நடராஜன், டி.ராதாகிருஷ்ணன், கே.ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  

விழாவில் பூந்தமல்லி தொகுதி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி கலந்துகொண்டு திமுக கொடியை ஏற்றி வைத்து கலைஞரின் உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதனைத்தொடர்ந்து 499 பேருக்கு இனிப்பு மற்றும் அறுசுவை உணவு வழங்கி சிறப்புரையற்றினார். இதில் மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் டி.தேசிங்கு, மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் பொன்.விமல், ஜெயபுகழேந்தி, கவுரி கஜேந்திரன், சிவா கே.ஜெகதீசன், பார்த்தசாரதி, டி.ராஜா, இளங்கோவன், ரேணுகா, சுரேஷ் பாபு, ரமேஷ், விக்னேஷ், எஸ்.ஜெகதீசன், ஜி.சி.சி.கருணாநிதி, ஆர்.செந்தாமரை உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags : Annathanam ,A. Krishnasamy ,MLA , Artist Birthday, Annathanam, Welfare Assistance
× RELATED பூந்தமல்லி தாலுகா அலுவலகத்தில்...