பெர்லின் ஓபன் டென்னிஸ்: பைனலில் பெலிண்டா

பெர்லின்: ஜெர்மனியில் நடைபெறும் பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு பைனலில் விளையாட, சுவிஸ் வீராங்கனை பெலிண்டா பென்சிக் தகுதி பெற்றார். அரையிறுதியில் கிரீஸ் வீராங்கனை மரியா சாக்கரியுடன் (26 வயது, 6வது ரேங்க்) நேற்று மோதிய பெலிண்டா (25 வயது, 17வது ரேங்க்), டை பிரேக்கர் வரை நீண்ட முதல் செட்டில் 6-7 (5-7) என்ற கணக்கில் தோற்று பின்தங்கினார். எனினும், அடுத்த 2 செட்களிலும் சாக்கரியின் சர்வீஸ் ஆட்டங்களை முறியடித்த அவர் 6-7 (5-7), 6-4, 6-4 என்றகணக்கில் போராடி வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். மிகவும் விறுவிறுப்பாக அமைந்த அரையிறுதி ஆட்டம் 3 மணி, 7 நிமிடங்களுக்கு நீடித்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: