18 வயது ஹாலிவுட் நடிகர் மர்ம சாவு

லாஸ்ஏஞ்சல்ஸ்: கடந்த 2019ம் ஆண்டு அமேசான் பிரைம் வீடியோ சீரிஸில் வெளியான Just Add Magic வெப்சீரிஸில் கவுரவ வேடத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய ஹாலிவுட்டின் இளம் நடிகர் டைலர் சாண்டர்ஸ். அவரது நடிப்புக்காக எம்மி விருதுக்கு நாமினேட் ஆகி இருந்தார். இந்நிலையில், மர்மமான முறையில் அவர் இறந்து கிடந்ததை அறிந்து ஹாலிவுட் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது. அவருக்கு வெறும் 18 வயது தான் என்பது குறிப்பிடத்தக்கது. ஓரிரு நாட்கள் முன் உயிரிழந்த இவரது மரணம் தொடர்பான விசாரணையை போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர். ஹாலிவுட்டில் 10 வயது முதலே பல படங்கள் மற்றும் டிவி தொடர்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அசத்தி வந்தவர் டைலர் சாண்டர்ஸ். கடந்த 2017ம் ஆண்டு ‘Fear the Walking Dead’ எனும் பிரபல தொலைக்காட்சி தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் இவர் நடித்து இருந்தார். இளம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர். கடைசி படம் சமையல் புத்தகத்தில் உள்ள மேஜிக்கை கொண்டு உருவாக்கப்பட்ட Just Add Magic வெப்சீரிஸில் லியோ எனும் கதாபாத்திரத்தில் நடித்த டைலர் சாண்டர்ஸ் கடந்த 2019ம் ஆண்டு கெவின் சார்போ நடிப்பில் வெளியான ‘The Reliant’ படத்தில் நடித்திருந்தார்.

Related Stories: