×

வைகோவுக்கு காயிதே மில்லத் விருது: எஸ்டிபிஐ அறிவிப்பு

சென்னை: சென்னையில் வருகிற 2ம் தேதி நடக்கும் விழாவில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு காயிதேமில்லத் விருது வழங்கப்படும் என்று எஸ்.டி.பி.ஐ. கட்சி அறிவித்துள்ளது. எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பாக இந்த ஆண்டுக்கான (2022) விருதுகளை பெறும் ஆளுமைகளை தேர்ந்தெடுக்க விருதாளர்கள்தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதன்படி காயிதே மில்லத் விருது மதிமுக பொது செயலாளர் வைகோ, தந்தை பெரியார் விருது-பேராசிரியர் பிரபா கல்வி மணி, டாக்டர் அம்பேத்கர் விருது-மூத்த வழக்கறிஞர் என்.ஜி.ஆர்.பிரசாத்.

காமராஜர் விருது-பாளையங்கோட்டை சதகத்துல்லா அப்பா கல்லூரி, பழனிபாபா விருது-விசிக துணை பொது செயலாளர் வன்னி அரசு, கவிக்கோ விருது-டாக்டர் ராஜா முகம்மது, ஐயா நம்மாழ்வார் விருது- எட்டு வழிச்சாலை எதிர்ப்பு இயக்கம் ஒருங்கிணைப்பாளர் பழனியப்பன், அன்னை தெரசா விருது- அகில இந்திய அரவாணிகள் உரிமைகள் மற்றும் மறுவாழ்வு மையம் இயக்குனர் டாக்டர் மோகனா அம்மாள் நாயக் ஆகியோருக்கு வழங்கப்படுகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த ஆளுமைகளுக்கு ஜூலை 2ம் தேதி, சென்னையில் நடைபெறும் விழாவில் விருதுகள் வழங்கப்படும்.

Tags : Vaigo ,STBI , Gaithe Millat Award for Vaiko: STBI Announcement
× RELATED மாஞ்சோலை தேயிலைத் தோட்ட...