×

சட்ட விரோதமாக மீன் பிடித்தால் மானியங்கள் ரத்து: உலக வர்த்தக அமைப்பில் ஒப்புதல்

ஜெனீவா: உலக வர்த்தக அமைப்பில் 164 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இதன் 12வது உறுப்பினர்கள் கூட்டம் ஜெனீவாவில் கடந்த 12ம் தேதி தொடங்கி நேற்றுடன் முடிந்தது. இதில், கடந்த 27 ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள உலக வர்த்தக அமைப்பின் விதிகள், சட்டங்களில் திருத்தங்கள் மேற்கொள்ள உறுப்பு நாடுகள் சம்மதம் தெரிவித்தன.

மேலும், கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இழுபறியில் இருந்து வந்த மீன்பிடி மானிய ரத்துக்கான ஒப்பந்தமும் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, சட்ட விரோதமாக அத்துமீறி மீன்பிடித்தல், முன் அறிவிப்பின்றி மீன் பிடித்தல், அதிகளவில் மீன்பிடித்தல் ஆகியவற்றின் அடிப்படையில் மீன்பிடி மானியத்தை ரத்து செய்யும் ஒப்பந்தத்துக்கு உறுப்பினர் நாடுகள் ஒப்புதல் அளித்தன.

மேலும், அனைத்து நாடுகளிலும் கொரோனா தடுப்பூசியை தயாரிப்பதற்காக, தற்காலிகமாக காப்புரிமையை ரத்து செய்யும் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன்படி, கொரோனா தடுப்பூசியை தயாரிக்க, இதை கண்டுபிடித்த நிறுவனங்களிடம் காப்புரிமை பெற வேண்டிய அவசியம் இல்லை.

இந்த கூட்டத்தில் பங்கேற்ற ஒன்றிய வர்த்தக துறை அமைச்சர் பியூஷ் கோயல், `உலக வர்த்தக அமைப்பு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள், உறுப்பு நாடுகளை ஊக்குவிப்பதாக உள்ளது. நீண்ட காலமாக இழுபறியில் இருந்த பிரச்னைகளில் தீர்வு எட்டப்பட்டு உள்ளது,’ என்று தெரிவித்தார்.

Tags : WTO , Cancellation of subsidies for illegal fishing: WTO approval
× RELATED உலக வர்த்தக அமைப்பின் 13-வது...