×

உலக வர்த்தக அமைப்பின் 13-வது அமைச்சர்கள் மாநாடு: உறுப்பினராக விண்ணப்பித்த நாடுகளுக்கு இந்தியா ஆதரவு

அபுதாபி: உலக வர்த்தக அமைப்பின் 13-வது அமைச்சர்கள் மாநாடு ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அபுதாபியில் நடைபெற்று வருகிறது. இதில், கலந்து கொள்வதற்காக ஒன்றிய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் சென்றுள்ளார்.இந்த நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது செய்தியாளர்கள் எழுப்பிய கேள்வி பதிலளித்த அமைச்சர்:
உலக வர்த்தக அமைப்பில் உறுப்பினர் அந்தஸ்து கோரி 22-க்கும் மேற்பட்ட நாடுகள் விண்ணப்பித்துள்ளன. அவர்களுடைய கோரிக்கைகளை கருணை அடிப்படையிலான பார்வை கொண்டு, உலகளாவிய தெற்கு பகுதியின் தலைவர் என்ற வகையில், இந்தியா அதற்கு தன்னுடைய ஆதரவை அளிக்கும் என கூறினார்.

இரு தினங்களுக்கு முன் கடந்த 26-ந்தேதி நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கமரோஸ் மற்றும் திமோர்-லெஸ்தே, முறைப்படி உலக வர்த்தக அமைப்பில் இணைந்தன. இந்த இரு நாடுகளும் இணைந்தது பற்றி குறிப்பிட்டு பேசிய கோயல், கமரோஸ் மற்றும் திமோர்-லெஸ்தே ஆகிய நாடுகள் உலக வர்த்தக அமைப்பின் உறுப்பினர்களாக இடம்பெற வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தினார். அவை, உலக வர்த்தக அமைப்பில் சேர்க்கப்பட்டதற்காக நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம் என கூறியுள்ளார்.

The post உலக வர்த்தக அமைப்பின் 13-வது அமைச்சர்கள் மாநாடு: உறுப்பினராக விண்ணப்பித்த நாடுகளுக்கு இந்தியா ஆதரவு appeared first on Dinakaran.

Tags : 13TH MINISTERIAL ,CONFERENCE OF THE WORLD TRADE ORGANIZATION ,INDIA ,Abu Dhabi ,13th Ministerial Conference of the World Trade Organization ,Abu Dhabi, United Arab Emirates ,Union ,Trade ,and Industry Minister ,Piyush Goyal ,13th Ministerial Conference of the WTO ,Dinakaran ,
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!