நுபுர் சர்மா கருத்துக்கு அமெரிக்கா கண்டனம்

நியூயார்க்: நுபுர் சர்மாவின் கருத்துக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில் தற்போது அமெரிக்காவும் கண்டனம் தெரிவித்துள்ளது. பாஜக முன்னாள் செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா, முகமது நபி  குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததற்கு, பல்வேறு நாடுகளும்  கண்டனங்களை தெரிவித்து வருகின்றன. அதனால் சர்ச்சை கருத்து தெரிவித்த நுபுர் சர்மா மற்றும் நவீன் குமார் ஜிண்டால் ஆகியோரை கட்சியில் இருந்து பாஜக நீக்கியது.

முஸ்லீம் நாடுகள் மட்டுமின்றி சீனாவும், நுபுர் சர்மா கருத்துக்கு கண்டனம் தெரிவித்தது. இந்நிலையில் அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ் செய்தியாளர்களிடம் இவ்விவகாரம் குறித்து கூறுகையில், ‘பாஜக நிர்வாகிகள் இருவரின் ஆட்சேபனைக்குரிய கருத்துக்களை கண்டிக்கிறோம்; இந்த விவகாரத்தில் அவர்கள் மீது பாஜக நடவடிக்கை எடுத்துள்ளதை வரவேற்கிறோம். மத சுதந்திரம் அல்லது நம்பிக்கை உட்பட மனித உரிமைகள் தொடர்பான விஷயங்கள் குறித்து இந்திய அரசுடன் தொடர்ந்து பேசிவருகிறோம்’ என்றார்.

Related Stories: