×

கல்குவாரி பகுதியில் பதுங்கி உள்ள சிறுத்தையை பிடிக்க வனத்துறை தீவிரம்

சத்தியமங்கலம் :  தாளவாடியை ஒட்டியுள்ள ஒசூர் கிராமப் பகுதியில் அமைந்துள்ள தனியார் கல்குவாரி பகுதியில்  நேற்று முன்தினம் பசு மாடு ஒன்று இறந்து கிடந்தது. தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்தை ஆய்வு செய்து பசுமாடு சிறுத்தையால் தாக்கப்பட்டு இறந்ததை உறுதி செய்தனர். இதையடுத்து வனத்துறையினர் தனிக்குழு அமைத்து இரவு முழுவதும் கண்காணிப்பு மேற்கொண்டனர்.

இதைத்தொடர்ந்து நேற்று தாளவாடி வனச்சரக அலுவலர்சதீஷ், தாளவாடி தாசில்தார் உமாமகேஸ்வரன், வனவர் பெருமாள், உலக இயற்கை நிதியக இணை ஒருங்கினைப்பாளர் கிருஷ்ணகுமார்,  மற்றும் வனப்பணியாளர்கள் கல்குவாரி முழுவதும் ஆய்வு செய்தனர்.

ட்ரோன் கேமராவை பயன்படுத்தி சிறுத்தை பதுங்கி இருப்பதை உறுதி செய்தனர். பலவருடங்களாக கற்கள் மலைபோல் குவித்து வைக்கப்பட்டுள்ளதால், சமீப காலமாக சிறுத்தை தங்குவதற்காக பயன்படுத்திவருவதாகவும், மேலும் அவ்விடத்தில் புதர் செடிகள் வளர்ந்திருப்பதால் சிறுத்தை பதுங்குவதற்கு ஏதுவாக உள்ளது.

வனத்துறையின் வேண்டுகோளுக்கினங்க கல்குவாரி உரிமையாளர் புதர் செடிகளை அகற்ற முன்வந்துள்ளதாகவும், வனத்துறை உயரதிகாரிகள்  உத்திரவின் பேரில் முக்கியமான இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் வனத்துறையினால் பொருத்தப்பட்டதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

மேலும் சிறுத்தையைப் பிடிப்பதற்காக இரையுடன் கூடிய கூண்டு வைக்கப்பட்டுள்ளது. ஆடு மேய்ப்பவர்களும், தனி நபர்களும் கல் குவாரி பகுதியில் வரவேண்டாம் என்று வனத்துறையினரால் எச்சரிக்கை செய்தி அருகில் உள்ள கிராமங்கள் முழுவதும் வழங்கப்பட்டுள்ளது.

Tags : Kalkugari , Satyamngalam, Leopard,Forest Depatment
× RELATED நெல்லை பொன்னாக்குடி அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து