வால்பாறை அருகே சிறுத்தை குட்டி இறந்தது

வால்பாறை : வால்பாறையை அடுத்து உள்ள கருமலை எஸ்டேட் 1வது தேயிலைத் தோட்டத்தில் சிறுத்தை குட்டி உயிரிழந்து அழுகிய நிலையில் கிடந்தது. இத்தகவலறிந்த, வால்பாறை வனச்சரகர் வெங்கடேஷ் தலைமையில் சென்ற வனத்துறையினர் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

பின்னர் உடல் ரொட்டிக்கடை வனத்துறை முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டு உதவி வன பாதுகாவலர் செல்வம் முன்னிலையில், வனத்துறை டாக்டர் விஜயராகவன் உடற்கூராய்வு செய்தார். அதில் ஆண் சிறுத்தை குட்டிக்கு 5 முதல் 7 மாதங்கள் வயது இருக்கும் என்றார். உடற்கூராய்வு முடிவு வந்த பிறகுதான் சிறுத்தை எதனால் இறந்தது? என தெரிய வரும் என டாக்டர் தெரிவித்தார். பின்னர் சிறுத்தை அங்கேயே எரிக்கப்பட்டது.

Related Stories: