×

திருவேற்காடு அரசுப் பள்ளிகளில் அடிப்படை வசதிகள்: அமைச்சர் சா.மு.நாசர் ஆய்வு

பூந்தமல்லி: திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள 3 அரசுப் பள்ளிகளில் நேற்று பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் திடீரென ஆய்வு செய்தார்.திருவேற்காடு சுந்தரசோழபுரத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 700 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளியில் நேற்று பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர்  வகுப்பறைகள், கழிவறை வசதி போன்றவற்றை ஆய்வு செய்தார். அப்போது,  மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கழிவறை வசதியில்லை, புதிய கழிவறை வசதி தேவை என்று அமைச்சரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அக்கோரிக்கை மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த அமைச்சர், பள்ளியை ஒட்டி ரூ20 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய பொதுக் கழிப்பிடத்தை தற்காலிகமாக பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தினார். இதனைத் தொடர்ந்து கோல்டன் அரிமா சங்கத்தின் பங்களிப்புடன் ரூ5 லட்சம் மதிப்பிலான கம்ப்யூட்டர்கள், மின்விசிறிகள் காங்கிரஸ் மாவட்ட தலைவர் லயன் டி.ரமேஷ் தலைமையில் அமைச்சர் நாசர் பள்ளி தலைமையாசிரியர் மற்றும் மாணவர்களிடம் வழங்கினார்.

இதையடுத்து, திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட கோலடியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆய்வு செய்த அமைச்சர் நாசர், அங்குள்ள குறைகளை கேட்டறிந்தார். இந்தப் பள்ளியில் 3 வகுப்பறைகள், 2 கழிப்பறைகள், 100 பெஞ்ச், மேஜை, பள்ளிக்கு சுற்றுச்சுவர் உள்ளிட்ட வசதிகள் செய்து தருமாறு அமைச்சரிடம் பள்ளித் தலைமையாசிரியர் நளினி கோரிக்கை வைத்தார். இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து கோரிக்கைகளை நிறைவேற்ற நகராட்சி அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து அயனம்பாக்கம் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆய்வு செய்த அமைச்சர் நாசர் அங்கு கழிப்பறைகளையும், சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்துக் கொள்ள அறிவுறுத்தினார். அரசுப் பள்ளிகளில் தேவையான அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து தரவும், உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தவும் நடவடிக்கை எடுக்குமாறு,  அதிகாரிகளுக்கு அப்போது அவர் உத்தரவிட்டார்.இதனைத் தொடர்ந்து அயனம்பாக்கம் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆய்வு செய்த அமைச்சர் நாசர் அங்கு கழிப்பறைகளையும், சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்துக் கொள்ள அறிவுறுத்தினார். அரசுப் பள்ளிகளில் தேவையான அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து தரவும், உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தவும் நடவடிக்கை எடுக்குமாறு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.

Tags : Thiruvetadu Government Schools , Basic facilities in government schools in Thiruverkadu: Minister Samu Nasser's study
× RELATED மாநகரப் பேருந்துகள் நிற்காமல்...