×

கோவையில் தினகரன் கல்வி கண்காட்சி நாளை மறுநாள் துவக்கம் : மாணவர்களுக்கு ஒவ்வொரு மணி நேரத்திற்கும் பரிசு

கோவை : கோவை தினகரன் நாளிதழ் சார்பில், மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில், ஆண்டுதோறும் நடத்தப்படும் கல்வி கண்காட்சி இந்த மாதம், ஜூன் 18, 19 ஆகிய தேதிகளில் கோவை அவிநாசி சாலை சுகுணா கல்யாண மண்டபத்தில் காலை 9.30 மணி முதல் மாலை 6 மணி வரை நடக்கிறது. மாணவர்கள் அளித்துவரும் பெரும் ஆதரவை தொடர்ந்து, 9-வது ஆண்டாக இக்கண்காட்சி நடத்தப்படுகிறது. இதனை, கோவை கிருஷ்ணா கல்வி குழுமங்கள் மற்றும் ஆச்சார்யா பெங்களூரு பி-ஸ்கூல் நிறுவனங்கள் இணைந்து நடத்துகின்றன.

இதன் மீடியா பார்ட்னர்களாக தமிழ்முரசு மாலை நாளிதழ், குங்குமம், குங்குமம் டாக்டர் ஆகிய இதழ்கள் மற்றும் கோவை சூரியன் எப்.எம் நிறுவனம் ஆகியவை உள்ளன. இந்த மாபெரும் கல்வி கண்காட்சியில், தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பிரபல கல்வி நிறுவனங்கள், வெளிநாட்டு கல்வி நிறுவனங்கள், வெளிநாட்டு கல்வி ஆலோசனை நிறுவனங்கள், கம்ப்யூட்டர் கல்வி நிறுவனங்கள், ஹோட்டல் மேனேஜ்மெண்ட் நிறுவனங்கள் உள்ளிட்ட ஏராளமான கல்வி நிறுவனங்கள் பங்கேற்கின்றன. மேலும், இக்காண்காட்சியில் வெளிநாட்டு பிரதிநிதி கல்வி நிறுவனங்களும் பங்கேற்பது கூடுதல் சிறப்பு ஆகும்.

இக்கண்காட்சியில், 50-க்கும் மேற்பட்ட ஸ்ட்டால்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாணவ-மாணவிகள் என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? என்ற கேள்விகளுக்கு விடையளிக்கும் விதமாக சிறந்த கல்வியாளர்களின் ஆலோசனைகள், பட்டப்படிப்பிற்கு பிறகு மேற்படிப்பிற்கு வெளிநாடு செல்ல விரும்பும் மாணவர்களுக்கான வழிமுறைகள், கல்விக்கடன் பெற தேவையான ஆலோசனைகள் இங்கு வழங்கப்படுகிறது.

மாணவ-மாணவிகள் மற்றும் பெற்றோர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக, ஒரு முழுமையான கண்காட்சியாக இது அமைந்துள்ளது. கல்வி சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் இக்கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இக்கண்காட்சியை காண வருகை தரும் அனைவருக்கும் ‘’கல்வி ஆலோசனை’’ புத்தகம் இலவசமாக வழங்கப்படுகிறது.

இக்கண்காட்சியை காண வரும் மாணவ-மாணவிகளுக்கு, திறன் அடிப்படையில், ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒருமுறை பரிசுகள் வழங்கப்படுகிறது. வரும் 18 மற்றும் 19ம் தேதி ஆகிய இரண்டு நாட்கள் ஆச்சரியமூட்டும் வகையில் பரிசுகள் வழங்கப்படுகிறது. இந்த மாபெரும் கண்காட்சியை காண அனுமதி இலவசம்.


Tags : Dinakaran Educational Exhibition ,Gova , Coimbatore, Educational Expo, Dinakaran
× RELATED ஓணம் பண்டிகை, வார இறுதி நாட்கள் மற்று...