×

சிறப்பு பொருளாதார மண்டலத்திற்காக பெரம்பலூரில் கையகப்படுத்திய நிலங்கள் திருப்பி ஒப்படைக்கப்படுமா?.. விவசாயிகள் எதிர்பார்ப்பு

பெரம்பலூர்: பாரபட்சம் பாராமல் ஜெயங்கொண்டம் நிலக்கரி மின் திட்டத்திற்காக கையகப்படுத்திய நிலங்களை திரும்ப வழங்க உத்தரவிட்டதுபோல், பெரம்பலூர் மாவட்டத்தில் சிறப்புப் பொருளாதார மண்டலத்திற்காக கையகப்படுத்திய நிலங்களை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக, பொதுச் சட்டங்களிலிருந்து விலக்களித்து, சிறப்புச்சலுகைகளுடன் ஓர் அரசால் ஏதுவாக்கப்ப டும் கட்டமைப்பே சிறப்புப் பொருளாதார மண்டலம்.

அவ்வாறு மத்திய அரசால் நாடு முழுக்க பல்வேறு இட ங்ஙஙளில் சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைத்திட திட்டமிட்ட சமயத்தில் தமிழகத்தின் மையத்தில் மிகச்சிறிய மாவட்டமாகத் திகழும் பெரம்பலூர் மாவட்டத்தில், தொழில் வளத்தை ஏற்படுத்தி அதன்மூலம் பல்லாயிரக்கணக்கான இளை ஞர்களுக்கு வேலைவாய்ப்பினை உருவாக்கிட சிறப்பு பொருளாதார மண்டலம் அமைத்திட பாராளுமன்றத்தில் குரல் கொடுத்தவர் முன்னாள் மத்தியஅமைச்சரான ஆ.ராசா. இதனால் மத்தி ய அரசு பெரம்பலூர் மாவட் டத்தில் சிறப்புப் பொருளா தார மண்டலம் அமைத்திட ஒப்புதல் வழங்கியது.

இதற் காக ஆந்திராவைச் சேர்ந்த ஜிவிகே குழுமமும், இந்திய அரசின் பெருவணிகத் து றையும் (டெட்கோ) இணை ந்து, கடந்த 2007ம் ஆண் டு பெரம்பலூர் மாவட்டத் தில், வேப்பந்தட்டை, குன் னம் தாலுகாக்களுக்கு உட்பட்ட சின்னாறு, எறை யூர், பெருமத்தூர், மிளகாந த்தம், பென்னக் கோணம், லெப்பைக்குடிகாடு, திருமா ந்துறை, வ.கீரனூர், அயன் பேரையூர் பகுதிகளில் சிற ப்புப் பொருளாதார மண்ட லம் அமைக்க 1100க்கும் மே ற்பட்ட விவசாயிகளுக்குச் சொந்தமான 3,800 ஏக்கர் விவசாய விளை நிலங்க ளைக் கையகப்படுத்தினர். அறிவித்தபடிதிட்டம் செயல் படுத்தாமலேயே 15 ஆண்டுகள் கடந்துவிட்டது.

குண்டூசி முதல் ஹூண்டாய் காரின் உதிரி பாகங்கள் வரை தயாரிக்கக்கூடிய சி றப்புப் பொருளாதார மண் டலம் அமையப்போகிறது எனக்கூறி தொடங்கப்பட்டு ஆட்சிமாற்றங்களால் அப்ப டியே கிடப்பில் போடப்பட்டு திட்டமே செய ல்படுத்தப்ப டாத நிலையில் உள்ளது. பல்வேறுகட்ட போராட்டங்க ளின் எதிரொலியாக 2013ம் ஆண்டு சட்டமன்றத் தில் பேசிய அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, 110 விதியின் கீழ், ஏற்கனவே சிறப்புப் பொருளாதார மண்டலத்திற்காக நிலங் கள் கையகப் படுத்தப்பட்ட பகுதியில், 827கோடி ரூபாய் மதிப்பீட்டில், விமான உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொ ழிற்சாலை அமைக்கப்படும் எனவும்,

5 ஆண்டுகளில் 50 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்படும் எனவும் கூறினார். அதோடு நிலம் கொடுத்தவர்களுக்கு வீட்டுக்கு ஒரு வேலை யும், வீட்டுமனையும் வழங் குவதாகக் கூறி, இதனை உறுதிப்படுத்தி பதிவுசெய் யப்பட்ட ஒப்பந்தபத்திரமும் வழங்கினார். இருந்தும் தற் போது 9ஆண்டுகளாகியும், விமான உதிரி பாகங்கள் தயாரிக்கும் திட்டம், இதுவ ரைதொடங்கப்படவில்லை. எனவே நிலம் கையகப் படு த்தப்படும் சட்ட விதிகளின் படி, 5 ஆண்டுகளுக்குள் திட் டத்தை செயல் படுத்தாத பட்சத்தில், கையகப்படுத் திய நிலங்களை, நிலம் கொடுத்த விவசாயிகளிடமே திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்கிற,

இந்திய அர சின் சட்ட விதிமுறைகளை ஜிவிகே நிறுவனம் மீறியுள் ளது. எனவே நிலம்வழங்கிய 1,125 விவசாயிகளுக்கும் அவர்களிடமிருந்து கையக ப்படுத்தப்பட்ட நிலங்களை திருப்பித்தர வேண்டும் என பல்வேறு கட்ட போராட்டங் கள் அரசின் கவனத்தை ஈர் க்கும்படி அதிமுக ஆட்சி கா லத்தில் நடத்தியும் 10ஆண் டுகள்தான் பாழாய்ப்போயி ன. குறிப்பாக பெரம்பலூர் வரு வாய் கோட்டாட்சியர் அலுவ லகத்தில் 2019 செப்டம்ப ரில் ஆர்டிஓ தலைமையில் நடைபெற்ற அமைதிப் பேச் சு வார்த்தையில் சிறப்புப் பொருளாதார மண்டலத்திற்கு நிலங்கள் கையகப்படுத்தப்பட்ட பகுதியில் அ மெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்த பிரபல கார்கம்பெனி மூலம் கார்கள் தயாரிக்கும் தொழி ற்சாலை அமைக்கப்படும் என ஜிவிகே குழுமத்தார் சார்பில் பதில் தரப்பட்டும்,

அதனை ஏற்காத தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர், அதில் ஒருசதவீதம்கூட தங்களுக்கு நம்பிக்கையில் லை எனக்கூறி திருமாந்து றை பகுதியில் நில மீட்புப் போராட்டத்தை நடத்தினர். இருந்தும் 15 ஆண்டுகளை கடந்து கிணற்றில் போட்ட கல்லாக சிறப்புப் பொருளா தார மண்டலம் அமைக்கும் திட்டம் உள்ளது.
இந்நிலையில் கடந்த 8ம் தேதி தமிழகமுதல்வர் மு.க.ஸ்டாலின் ஜெயங்கொண் டம் நிலக்கரி மின்திட்டத்தி ற்காக 13 கிராமங்களைச் சேர்ந்த 8,373
விவசாயிகளிடமிருந்து 25 ஆண்டுகளுக் கு முன்புகையகப்படுத்திய நிலங்களை, திட்டம் செயல் படுத்தாததால் திரும்ப வழ ங்க உத்தரவிட்டு 25 ஆண்டு போராட்ட வாழ்க்கைக்கு ந ல்லதொரு தீர்வைக் கண்டு தேர்தல் வாக்குறுதியை நி றைவேற்றியுள்ளார்.

அதே போல் பெரம்பலூர் மாவட்ட த்தில் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைப்பதற்காக 15 ஆண்டுகளுக்குமுன்பு நி லம் வழங்கி பயன்பாட்டில் இருந்த நிலம் அனைத்தும் தரிசாக கிடந்து கண்ணீரை வரவழைக்கும் வேளையில் திட்டத்தை செயல்படுத்த கைய கப்படுத்திய நிலங்க ளில் அரசு விதிகளின்படி கையகப்படுத்திய 5 ஆண் டுகளில் திட்டத்தை செயல் படுத்தாத விதிமீறல் உள்ள தை காரணம் காட்டி தமிழக அரசு ஜிவிகே குழுமத்திற் கு விவசாயிகளிடமிருந்து பெற்றுத்தந்த நிலங்களை பறிமுதல்செய்து நிலம் கொடுத்த விவசாயிகளிட மே திரும்ப வழங்க உத்தர விடவேண்டும் என பெரம்ப லூர் மாவட்ட விவசாயிகள் மத்தியில் போர்க்குரல் எழு ந்துள்ளது.

இது குறித்து சிற ப்பு பொருளாதார மண்டல ம் அமைவதற்காக தொடர் ந்து குரல் கொடுத்துவரும் தமிழ்நாடுவிவசாயிகள் சங் கத்தின் மாவட்ட செயலாளர் செல்லதுரை தெரிவித்திரு ப்பதாவது : சிறப்புப் பொருளாதார ம ண்டலத்தை விரைந்து அ மைப்பதற்காக கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு கட்ட போராட்டங் களை நடத்தியுள்ளோம். தற்போதுவரை நில மீட்புப் போராட்டத்தை நடத்தி வரு கிறோம். சிறப்புப் பொரு ளாதார மண்டலம் அமைப்ப தற்காக எந்தவித முன்னே ற்பாடும் இல்லாத நிலையி ல், திட்டம் தொடங்குவதற் கான அறிகுறியே இல்லாத சூழலில், நிலம் வழங்கிய விவசாயிகளிடமே நிலத் தைத் திரும்ப ஒப்படைக்க வேண்டியதுதான் சட்டமா கும்.

ஜிவிகே குழுமம் போ ட்ட ஒப்பந்தப்படி நிலம் கொ டுத்த விவசாயிகளுக்கு வீட் டுமனை தருவோம், நிலம் கொடுத்தகுடும்பத்தில் ஒரு வருக்கு வேலை தருவோம் எனக் கூறிய எதையுமே செ யல் படுத்தாத நிலையில் என்ன தேவைக்காக நிலம் கையக ப்படுத்தப்பட்டதோ அந்தத் தேவையை அவர் கள் நிறைவேற்றாத நிலை யில், விவசாயம் செய்ய நி லத்திற்கு செல்லும் விவசா யிகளை கூர்க்காக்களை வைத்து விரட்டுகிற ஜிவி கே குழுமத்திடமிருந்து த மிழக அரசே அந்த நிலத் தை பறிமுதல் செய்து நில ம்கொடுத்த விவசாயிகளு க்கு திரும்ப வழங்கிட நடவ டிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் நிலமீட்புப் போராட்டம் இதுவரை இல் லாதபடிக்கு அனைத்து விவசாய சங்கங்கள், அனைத் துக்கட்சிப் பிரமுகர்களைத் திரட்டி நடத்தப்படும் எனத் தெரிவித்தார்.

* அரசு விதிகளின்படி கையகப்படுத்திய 5 ஆண் டுகளில் திட்டத்தை செயல் படுத்தாத விதிமீறல் உள்ள தை காரணம் காட்டி தமிழக அரசு ஜிவிகே குழுமத்திற் கு விவசாயிகளிடமிருந்து பெற்றுத்தந்த நிலங்களை பறிமுதல்செய்து நிலம் கொடுத்த விவசாயிகளிட மே திரும்ப வழங்க உத்தர விடவேண்டும் என பெரம்ப லூர் மாவட்ட விவசாயிகள் மத்தியில் போர்க்குரல் எழு ந்துள்ளது.

* குண்டூசி முதல் ஹூண்டாய் காரின் உதிரி பாகங்கள் வரை தயாரிக்கக்கூடிய சி றப்புப் பொருளாதார மண் டலம் அமையப்போகிறது எனக்கூறி தொடங்கப்பட்டு ஆட்சிமாற்றங்களால் அப்படியே கிடப்பில் போடப்பட்டு திட்டமே செயல்படுத்தப்படாத நிலையில் உள்ளது.

Tags : Perambalur ,Special Economic Zone , Will the lands acquired in Perambalur for the Special Economic Zone be returned? .. Farmers expect
× RELATED பெரம்பலூர் மாவட்ட கிரிக்கெட் வீரர்களுக்கான தேர்வுப் போட்டி