×

சத்தீஸ்கரில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 11 வயது சிறுவன் சுமார் 104 மணி நேர போராட்டத்திற்கு பிறகு உயிருடன் மீட்பு: குவியும் பாராட்டுக்கள்!!

ராய்ப்பூர் : சத்தீஸ்கர் மாநிலத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 11 வயது சிறுவன் சுமார் 104 மணி நேர போராட்டத்திற்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்டுள்ளான். சத்தீஸ்கர் மாநிலம் Janjgir Champa மாவட்டத்தில் உள்ள Pihrid  கிராமத்தைச் சேர்ந்த 11 வயது சிறுவன் ராகுல் சாஹு கடந்த 10ம் தேதி தமது வீட்டின் அருகே பல ஆண்டுகளாக பயன்பாடு இல்லாமல் இருந்த ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான். சிறுவன் ராகுலை மீட்கும் பணிகளை தேசிய பேரிடர் மீட்புப் படையினர், உள்ளூர் படையினர் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் தீவிரமாக மேற்கொண்டனர்.

முதலில் ஆழ்துளை கிணற்றுக்கு அருகே ராட்சத சுரங்கம் தோண்டப்பட்டது. ஆழ்துளை கிணற்றில் சிக்கி தவித்த சிறுவன் ராகுலுக்கு குழாய் வழியாக ஆக்சிஜன் வழங்கப்பட்டு வந்தது. சிறுவன் அச்சமின்றி ஒத்துழைப்பு வழங்கியதால் மீட்புப் படையினர் நம்பிக்கை தளராமல் பணிகளை தொடர்ந்தனர். ஆனால் சுரங்கப்பாதை தோண்டிய சில அடி ஆழத்தில் பாறைகள் தென்பட்டதால் தொடர்ந்து சுரங்கம் தோண்டும் பணிகள் மந்தம் அடைந்தன. இந்த நிலையில் சுமார் 104  மணி நேர போராட்டத்திற்கு பின்னர் சிறுவன் ராகுல் உயிருடன் மீட்கப்பட்டான்.ஆழ்துளை கிணற்றில் இருந்து மீட்கப்பட்டதும் சிறுவன் ராகுல் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டான்.

இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அம்மாநில முதல்வர், மீட்புக் குழுவினரின் அர்ப்பணிப்பு மற்றும் அனைவரின் பிரார்த்தனையால் ராகுல் சாஹு உயிருடன் மீட்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். சிறுவனை மீட்கும் பணியில் இடைவிடாது ஈடுபட்டு வெற்றியும் கண்ட மீட்புக் குழுவினருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.


Tags : Chattisgarh , Chhattisgarh, deep well, boy
× RELATED 2 பெண் நக்சல் சுட்டுக்கொலை