ஹாலிவுட் படங்களில் நடிக்கும் மலையாள பெண்

லாஸ்ஏஞ்சல்ஸ்: ஹாலிவுட் படங்களில் கேரளாவை சேர்ந்த மலையாள பெண் நடித்து வருகிறார்.சமீபத்தில் வெளியான ஹாலிவுட் படமான ‘ஜுராசிக் வேர்ல்ட் டாமினியன்’ படத்தில் டைனோசர் பூங்காவின் பாதுகாவலராக நடித்திருந்தவர் வரதா சேது. இவர் அமெரிக்காவில் வாழும் மலையாள பெண். ஹாலிவுட்டில் தயாரான ‘நவ் யூ சீ மீ 2’ படத்தில் இவர் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். விண்வெளி புனைகதை தொடரான ‘ஸ்டார் வார்ஸ்’ படத்திலும் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். தற்போது ஹாலிவுட் வெப் தொடர்களில் நடித்து வருகிறார். முதல்முறையாக மலையாள படத்திலும் நடிக்க இருக்கிறார். பிரமதாவனம் என்ற படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமாகிறார் வரதா சேது. இந்த படத்தை ஜெயராஜ் இயக்குகிறார். ஷாம் நீல் நாயகனாக நடிக்கிறார். உன்னிமுகுந்தன் முக்கிய கேரக்டரில் நடிக்க, சச்சு சாஜி ஒளிப்பதிவு செய்கிறார், ஸ்ரீனிஷ் இசை அமைக்கிறார்.

‘பெற்றோர் அமெரிக்கா சென்றதும் அங்கேதான் நான் பிறந்தேன், வளர்ந்தேன். விடுமுறையில் கேரளாவுக்கு வருவேன். அப்போது மலையாளம் கற்றுக்கொண்டேன். அமெரிக்காவில் படித்தபோது, தியேட்டர்களில் நடித்தேன். அதன் மூலம் பட வாய்ப்புகளும் கிடைத்தது’ என்றார் வரதா சேது.

Related Stories: