×

ரூ17.32 லட்சம் மதிப்பில் தொடக்கப்பள்ளிக்கு கூடுதல் கட்டிடம்: வி.ஜி.ராஜேந்திரன் எம்எல்ஏ திறந்து வைத்தார்

திருவள்ளூர்: பூண்டி ஊராட்சி ஒன்றியம், கைவண்டூர் ஊராட்சி, குப்பம்மாசத்திரம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் உள்ள வகுப்பறை கட்டிடம் சேதமடைந்த நிலையில் மாணவ, மாணவிகள் அமர்ந்து படிக்க வேண்டிய சூழ்நிலை இருந்தது. இதனால், கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்ட வலியுறுத்தி கிராம மக்கள் திருவள்ளூர் தொகுதி எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரனிடம் தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர்.இந்நிலையில், திருவள்ளூர் தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் ரூ17.32 லட்சத்தில் புதிய வகுப்பறைகள் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்பேரில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் அமைக்கும் பணி நடைபெற்று தற்போது நிறைவுபெற்றது.

இதனையடுத்து கூடுதல் வகுப்பறைகள் கட்டிடத்தை மாணவ, மாணவிகளின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு வட்டார கல்வி அலுவலர் பூவராகவமூர்த்தி தலைமை வகித்தார். கூடுதல் வட்டார கல்வி அலுவலர் ஆனி பெட்டிஷிய பொற்கொடி முன்னிலை வகித்தார். திருவள்ளூர் தொகுதி எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன் புதிய பள்ளி கட்டிடத்தை திறந்து வைத்து  குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
இதைத்தொடர்ந்து மாணவ, மாணவிகளுக்கு புத்தகங்கள் மற்றும் இனிப்புகளையும் எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஒன்றிய திமுக செயலாளர்கள் கிறிஸ்டி, மோ.ரமேஷ், நிர்வாகிகள் பா.சிட்டிபாபு, தா.மோதிலால், ஊராட்சி தலைவர் சௌக்கார் பாண்டியன், துணை தலைவர் அருள் செல்வம், பள்ளி தலைமை ஆசிரியர் லட்சுமி, உதவி தலைமை ஆசிரியர் தேன்மொழி, ஆசிரியர் விஜயா மற்றும் பெற்றோர் பங்கேற்றனர்.


Tags : Rajendran ,MLA , Additional building for primary school at a cost of Rs 17.32 lakh, VG Rajendran MLA opens
× RELATED அரசு பஸ் கண்ணாடி உடைந்தது