×

ஆனைமலை அருகே 3 ஆடுகளை வேட்டையாடிய மர்ம விலங்கால் பரபரப்பு-வனதுறையினர் விசாரணை

ஆனைமலை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை அருகே வேட்டைக்காரன் புதூர் மற்றும் சேத்துமடை உள்ளிட்ட பகுதிகளில் , அண்மைக்காலமாக மர்ம விலங்கு நடமாடி அப்பகுதி தோட்டத்திலுள்ள ஆடு , கோழி உள்ளிட்ட கால்நடைகளை வேட்டையாடுவது பொது மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

இதில் வேட்டைக்காரன்புதூர் அசோக் நகர் பகுதி அழுக்கு சாமியார் கோவில் வீதியில் வசிக்கும் மகாலிங்கம் என்பவர் தோட்டத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த, மூன்று ஆடுகளை மர்ம விலங்குகள் நேற்று முன்தினம் நள்ளிரவில்  வேட்டையாடி கொன்றுள்ளது.நேற்று காலையில் வழக்கம்போல் தோட்டத்து சாலைக்கு வந்த மகாலிங்கம், ஆடுகள் மர்ம விலங்கு தாக்கி இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து.வனத்துறையினர் பார்க்கும்போது, மூன்று ஆண்டுகளில் ஒரு ஆட்டின் உடல் பாகங்கள் முழுவதையும் மர்ம விலங்கால்வேட்டையாடி கிடைப்பதைக் கண்டனர். ஆடுகளை கொன்ற மர்ம விலங்கு உப்பாறு வழியாக வந்திருக்கலாம் என சந்தேகித்துள்ளள்ளனர் இதையடுத்து வேட்டைக்காரன் புதூர் பகுதியில் மர்ம விலங்குகள் நடமாட்டம் குறித்து வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மர்ம விலங்கு தாக்கி ஆட்டை பறிகொடுத்த மகாலிங்கத்திற்கு இழப்பீடுத் தொகையாக ரூபாய் 5 ஆயிரம் மூலம் வழங்கப்பட்டது.

Tags : Animalai , Anaimalai: Hunter near Anaimalai next to Pollachi in Coimbatore district including Puthur and Sethumadai,
× RELATED மழை குறைவால் இளநீர் அறுவடை தீவிரம்;...