×

நேஷனல் ஹெரால்டு வழக்கு...டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் எம்.பி. ராகுல் காந்தி ஆஜர்.: காங்கிரஸ் கட்சியினர் தர்ணா

டெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கில் டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் எம்.பி. ராகுல் காந்தி ஆஜராகியுள்ளார். காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் இருந்து பேரணியாக என்று அமலாக்கத்துறை அலுவலகத்தில் ராகுல் காந்தி ஆஜரானார்.

விசாரணைக்கு ராகுல் காந்தி ஆஜராகி உள்ள நிலையில் அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு வெளியே காங்கிரஸ் கட்சியினர் தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர். காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் தர்ணா போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

நேஷனல் ஹெரால்டு வழக்கு விவரம், ஜவஹர்லால் நேரு உள்பட சுதந்திர போராட்ட வீரர்கள் சிலர் இனைந்து நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை 1938-ல் தொடங்கியுள்ளனர். ரூ.90 கோடி நஷ்டம் ஏற்பட்டதை அடுத்து நேஷனல் ஹெரால்டு பத்திரிக்கை நடத்துவது நிறுத்தப்பட்டது. அதனையடுத்து, நேஷனல் ஹெரால்டு பத்திரிக்கையை ரூ.92 கோடி கொடுத்து யங் இந்தியா நிறுவனம் விலைக்கு வாங்கியது.

நேஷனல் ஹெரால்டு பத்திரிக்கையை வாங்கியதில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடந்ததாக வழக்கு தொடரப்பட்டது. யங் இந்தியா நிறுவனம் ராகுல் மற்றும் சோனியா உள்ளிட்டோருக்கு சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : National Herald ,Delhi ,Rahul Gandhi Azhar ,Congress Party , National Herald case ... MP in Delhi enforcement office Rahul Gandhi Azhar .: Congress Party Dharna
× RELATED நாடாளுமன்ற பாதுகாப்பு அத்துமீறல் வழக்கு: கூடுதல் அவகாசம் கோரி போலீஸ் மனு