×

தடுப்பூசி ஒதுக்கீட்டில் நடுநிலை இல்லை: முத்தரசன் குற்றச்சாட்டு

சேலம்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நேற்று சேலத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: கொரோனா 2வது அலையை ஒன்றிய அரசு சரியான முறையில் கையாளவில்லை. மாநிலங்களுக்கு தடுப்பூசி ஒதுக்குவதில் மோடி அரசு நடுநிலையோடு செயல்படவில்லை. தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். குஜராத்தில் 6 கோடி மக்கள் வசிக்கிறார்கள். அங்கு 16 சதவீதம் தடுப்பூசி வினியோகம் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 8 கோடி மக்கள் வசிக்கிறார்கள். ஆனால் 6 சதவீதம் மட்டும் தடுப்பூசி வினியோகம் செய்யப்பட்டுள்ளது. கொரோனா நெருக்கடியான இந்த சூழ்நிலையில், 2வது அலையை எதிர்கொள்வது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் ஜனநாயக அணுகுமுறையை கடைபிடித்து வருகிறார். பெட்ரோல்,டீசல் விலை உயர்வை கண்டித்து போராட்டம் நடத்தாத பாரதிய ஜனதா கட்சியினர், தற்போது டாஸ்மாக் கடைகள் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது வேடிக்கையாக உள்ளது. கடந்த அதிமுக அரசு மத்திய அரசுக்கு அடிமையாக இருந்தது போல், தற்போது உள்ள அரசு அப்படி இருக்காது என்றார். …

The post தடுப்பூசி ஒதுக்கீட்டில் நடுநிலை இல்லை: முத்தரசன் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Mutharasan ,Salem ,Mutarasan ,Secretary of State ,Communist Party of India ,Corona ,2nd wave ,Union ,Dinakaran ,
× RELATED மத பிரச்சனைகளை கிளப்பி மக்களை...